Ajith-Sarathkumar: அஜித் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதோ அதோ என்று இழுத்தடித்து வந்த சூட்டிங் தற்போது சூடு பிடித்ததில் ரசிகர்களும் குஷியாகி இருக்கின்றனர். அதற்கேற்றார் போல் அவ்வப்போது வெளியாகும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.
படம் பற்றிய அப்டேட் வரவில்லை என்றாலும் அஜித்தின் போட்டோக்கள் அவருடைய ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சரத்குமார் அஜித் உடனான நட்பு பற்றி ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதில் அஜித், எப்போதுமே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார். தன் காதுக்கு நெகட்டிவான ஒரு விஷயம் வந்தால் அதை மனதிற்குள் வைத்துக் கொள்ள மாட்டார். சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்வது தான் அவரிடம் இருக்கும் நல்ல குணம்.
அப்படித்தான் ஒரு முறை அஜித்தின் படத்திற்கு ஒரு பிரச்சனை வந்திருக்கிறது. உடனே அவர் சரத்குமாருக்கு போன் போட்டு என் படத்திற்கு உங்கள் கட்சிக்காரரால் பிரச்சனை வந்துள்ளது. இதில் நீங்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது உண்மையா? என்று கேட்டிருக்கிறார்.
இதனால் பதறிப்போன சரத்குமார், இல்லை அஜித் அவர் என் கட்சியில் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது அவர் கட்சியை விட்டு விலகி விட்டார். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறார். இப்படி எந்த நெருடலாக இருந்தாலும் உடனே அஜித் சம்பந்தப்பட்டவரிடம் பேசி தெரிந்து கொள்வாராம்.
இதைப் பற்றி கூறியிருக்கும் சரத்குமார், இதுபோல் இரண்டு மூன்று முறை அஜித் என் வீட்டிற்கு வந்து பேசி இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். அவருடன் எனக்கு எப்போதுமே நல்ல நட்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். தற்போது சரத்குமார் அஜித் பற்றி கூறியிருக்கும் இந்த விஷயம் பலருக்கும் புதிய தகவலாக உள்ளது.