ஐஸ்வர்யா ராய் வேண்டாம்.. அப்பவே அஜித் எடுத்த முடிவைப் பார்த்து மிரண்டு போனார் இயக்குனர்.!

உலக அழகி என்று சொன்னாலே முதலில் நம்முடைய ஞாபகத்துக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய் தான். இவர் இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு தான் சில படங்களில் நடித்தார். அப்படி இவர் தமிழில் நடித்த படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

இந்தப் படத்தில் அஜித், ஐஸ்வர்யா ராய், தபு, மம்முட்டி ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் அஜித்திற்கு ஜோடியாக தபு நடித்திருப்பார். ஆனால் முதலில் அஜித், அப்பாஸ் கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டியதாக இருந்தது. பின்பு அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டார். ஏனென்றால் அந்த கதாபாத்திரத்திற்கு அஜித் முகத்தில் முடி இல்லாமல் மற்றும் மீசை, தாடி இல்லாமல் இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறி இருக்கிறார்.

ஆனால் அஜித் என்னால் தாடி, மீசை எடுக்க முடியாது என்று கூறிவிட்டார். அதனால் இயக்குனரிடம் அவர் என்னால் அப்படி நடிக்க முடியவே முடியாது என்று தீர்மானமாக கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து அஜித் எனக்கு இந்த கதாபாத்திரமே வேண்டாம் அதற்கு பதிலாக மற்றொரு கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

இதை கேட்ட இயக்குனர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் அந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராய் உடன் நடிப்பதற்கு பல ஹீரோக்கள் போட்டி போட்டு காத்திருந்தனர். அப்படி இருக்கையில் இவர் இப்படி சொன்னது அங்கே இருந்த அனைவரும் மிரண்டு போய் பார்த்து இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் அப்பொழுது அஜித் ஒரு சாதாரண ஹீரோ அவ்வளவுதான். அப்படி இருக்கும் போது ஐஸ்வர்யா ராய் எனக்கு முக்கியமில்லை என்னுடைய தாடி, மீசை தான் எனக்கு முக்கியம் என்று இயக்குனரிடம் கூறியதுதான். அதனால் இயக்குனர் அந்தக் கதையில் அப்பாஸை நடிக்க வைத்து அஜித்தை தபு உடன் நடிக்க வைத்து விட்டார்.

ஆனால் இதற்கெல்லாம் முன்னதாகவே ஐஸ்வர்யா ராய், இயக்குனரை சந்தித்து அஜித் எனக்கு ஜோடியாக வேண்டாம். அதற்கு பதிலாக அப்பாஸ் இருக்கட்டும் என்று கூறி இருக்கிறார். ஏனென்றால் அப்போது அஜித் புது ஹீரோவாக இருப்பதால் இந்த மாதிரி இவர் கூறியதாக தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இரண்டு பேருக்கும் ஏதோ ஒரு காரணங்களால் ஒத்துப் போகாமல் இருப்பதால் எந்த படங்களிலும் இதுவரை இவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை என்று தெரிகிறது.