மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அஜித்.. மருத்துவர்கள் கொடுத்த அட்வைஸால் தடைபடுமா விடாமுயற்சி.?

Actor Ajith: திடீரென அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அதை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என பதறி வந்த நிலையில் வழக்கமான பரிசோதனை தான் என்று கூறப்பட்டது.

ஆனால் மூளையில் கட்டி அதனால் அறுவை சிகிச்சை நடந்துள்ளது என வெளிவந்த செய்தி பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அது பொய்யான தகவல் என்றும் அஜித் காதுக்கு அருகில் நரம்பு வீக்கம் ஏற்பட்டு சிறு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

உடனே ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வந்தனர். மேலும் சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் அஜித் நலம் பெற வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். அதற்கு ஷாலினி, அஜித் நலமுடன் இருக்கிறார் என பதில் அளித்தார்.

இருப்பினும் ரசிகர்கள் அஜித் வீடு திரும்பும் நாளை தான் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி இருக்கிறார். இதை சுரேஷ் சந்திரா வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அதை அடுத்து விடாமுயற்சி சூட்டிங் பற்றிய கேள்விகள் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. ஆனால் அஜித் இன்னும் சில நாட்கள் ஓய்வில் தான் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கண்டிப்பாக கூறிவிட்டார்களாம். இதனால் படப்பிடிப்பு சில வாரங்கள் தள்ளி போகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பைனான்ஸ் பிரச்சனையின் காரணமாக லைக்கா படப்பிடிப்பை தள்ளிவைத்த நிலையில் தற்போது அஜித்தின் உடல் நலமும் ஒரு காரணமாகியுள்ளது. எது எப்படி இருந்தாலும் விடாமுயற்சியை விட ஏ.கே-வின் உடல் நலம் தான் முக்கியம் என அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.