குட் பேட் அக்லி படம் இரண்டு நாட்களுக்கு முன் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. ரிலீசானவிலிருந்து இன்றுவரை ஆயிரம் காட்சிகளுக்கு மேல் சென்னையில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாளான அன்று 40 கோடிகள் வசூலை பெற்றுத்தந்துள்ளது இதில் தமிழ்நாட்டில் மட்டும் 21 கோடிகள் கலெக்ஷன் கிடைத்துள்ளது.
இந்த படத்தால் விடாமுயற்சி படத்தினால் இழந்த இடத்தை மீண்டும் பிடித்துள்ளார் அஜித். மொத்தமாக விடாமுயற்சி படம் வசூலித்ததொகை 40 கோடிகள். இப்பொழுது வரை 70 கோடிகள் வசூலித்துள்ளதாம் குட் பேட் அக்லி. இந்த வார இறுதியில் 100 கோடிகளை தாண்டி விடும் என்கிறார்கள்.
முழுக்க முழுக்க ரசிகர்கள் மற்றும் ஜென்ரல் ஆடியன்ஸ் கொண்டாடும் விதமாக இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைத்தட்டல் காட்சிகளை வைத்து அசத்தியுள்ளார். இப்படி ஒரு டிரெண்டை வருங்கால இயக்குனர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார் ஆதிக்.
இந்த படம் இவ்வளவு சக்சஸ்புள்ளாக மாறுவதற்கு காரணம் அஜித் மட்டுமே என்கிறார் ஆதி ரவிச்சந்திரன். மிகவும் கீழ்படிந்து அஜித் நிறைய காட்சிகளில் நடித்துள்ளாராம். குறிப்பாக அர்ஜுன் தாஸ் கதாபாத்திரத்திடம் அடி வாங்குவது போல் உள்ள காட்சிகள் எல்லாம் வேண்டும் என்று சொன்னதே அஜித் தானாம்.
இதற்கு முன்னர் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் போல் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் கேரியருக்கு மீண்டும் ஒரு பூஸ்ட் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அஜித் இந்த படத்தை சொன்ன தேதிக்கு முடித்துக் கொடுத்து விட்டாராம். அவரால் படத்திற்கு எந்த ஒரு எக்ஸ்ட்ரா செலவும் ஆகவில்லையாம்.