Ajith: அஜித் இப்போது மீண்டும் ரேசில் ஆர்வம் காட்டி வருகிறார். தொடர்ந்து வெற்றி கோப்பையை தட்டி வரும் இவர் தற்போது தன்னுடைய ஃபிட்னஸ் பற்றிய ரகசியத்தை மனம் திறந்து பேசியுள்ளார்.
மீடியாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் கார் ரேஸில் கலந்து கொண்ட பிறகு சில குறிப்பிட்ட பத்திரிகைகளுக்கு மட்டும் பேட்டியளித்து வருகிறார்.
அதன்படி தற்போது அவர் 42 கிலோ வரை எடையை குறைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். அஜித் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நினைத்தால் எடையை கூட்டுவார். நினைத்தால் குறைத்து விடுவார்.
ஃபிட்னஸ் ரகசியத்தை சொன்ன அஜித்
அப்படித்தான் ரேசில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்ததுமே எடை குறைப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம். 2024 ஆகஸ்டில் தொடங்கிய தற்போது வரை அவர் 42 கிலோ எடை குறைந்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் உணவு கட்டுப்பாடுதான். அது மட்டுமின்றி உடற்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது ஆகியவற்றின் மூலம் நினைத்ததை சாதித்துள்ளார்.
அதேபோல் இப்போது அவர் டீ டோட்லராக மாறி இருக்கிறாராம். மேலும் சைவ உணவை மட்டுமே அவர் எடுத்துக் கொள்கிறார்.
ரேஸ் பந்தயத்தில் இதெல்லாம் முக்கியம். அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டதாகவும் இப்போது முழுமையாக அதில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் அஜித் சொன்ன ரகசியம் ஒரு மோட்டிவேஷனாக இருக்கிறது.