நடிகர் அஜித் நடிப்பில் வரும் ஐனவரி 11 ஆம் தேதி துணிவு படம் ரிலீசாக உள்ளது. அந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். விஜயின் வாரிசு படத்துடன் மோதவுள்ள துணிவு படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பிரிவியூ ஷோ திரையிடப்பட்டு நல்ல விமர்சனங்களையே பெற்றுள்ளது.
கன்டிப்பாக இந்த பொங்கல் துணிவு பொங்கலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு ஹெச்.வினோத் இப்படத்தின் கதையை நன்றாக எடுத்துள்ளதாகவும், அஜித் மாஸாக உள்ளதாகவும், படத்தின் பின்னணி இசை வேற லெவல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இப்படத்தில் இயக்குனர் ஹெச்.வினோத், நாயகி மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு வருகின்றனர்.
மேலும் படத்தில் நடித்த மற்ற பிரபலங்களும் பேட்டி கொடுத்து வருகின்றனர். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து விஜய் டிவி பிரபலங்கள் சிலர் நடித்துள்ளனர். அதிலும் முக்கியமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபலங்களான அமீர், பாவனி, சிபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒன்றாக போட்டியாளர்களாக கலந்துக் கொண்டவர்கள்.
சில மாதங்களுக்கு முன்பாக அமீர் அஜித்துடனான வாட்ஸ் சப் சாட் மெசேஜை பகிர்ந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் வைரலானது. இவர்கள் மூன்று பேரும் பேங்காங்கில் ஒன்றாக அஜித், மஞ்சு வாரியருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படமும் வைரலானது. மேலும் அஜித்துடன் இவர்கள் மூவரும் பேங்காங் கடலில் ஒன்றாக கப்பல் ஓட்டும் காட்சியில் நடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஜித்திற்கு பிடிக்காத விஷயத்தை பாவனியும் , அமீரும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளனர். துணிவு படத்தின் படப்பிடிப்பில் முதன் முதலாக அஜித்துடன் இணைய போவதை அறிந்த உடன், அவரை பார்க்க படப்பிடிப்பில் ஆர்வமாக இருந்தார்களாம். திடீரென எந்த ஒரு ஆர்பரிப்பும் இல்லாமால் சாதாரணமாக தங்களிடம் அஜித் வந்து பேசியதாக தெரிவித்தனர்.
மேலும் நாங்கள் அவர் வருவதை பார்த்தவுடன் எழுந்து நின்ற போது எங்களை அதட்டி கம் போட்டு ஒட்டி விடுவேன். உங்கள் நாற்காலியில் அமருங்கள் என செல்லமாக மிரட்டினாராம். அந்த அளவிற்கு அஜித் சாதாரண மனிதராக தங்களுடன் கலகலப்பாக மொத்த படப்பிடிப்பின் போதும் நடந்துக்கொண்டதாக இருவரும் பகிர்ந்துக் கொண்டனர்..மேலும் பாவனி, அமீர் இருவரும் காதலித்து வரும் நிலையில், இருவரையும் ஜோடியாக துணிவு படத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.