Ajith : அஜித் கடைசியாக நடித்த குட் பேட் அக்லி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் ஒரு படத்தில் கூட்டணி போட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தவிர தனுஷ் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருக்கிறாராம். இந்த சூழலில் அஜித்தின் கார் ரேஸ்கள் எல்லாமே லைவில் ஒளிபரப்பாகும்படி யூடியூபில் வெளியாகி இருக்கிறது. அஜித் குமார் ரேசிங் என்ற தலைப்பில் இந்த வீடியோக்கள் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
அடுத்ததாக அஜித் நவம்பர் மாதத்தில் தான் படங்களில் நடிக்க இருக்கிறார். ஆகையால் இப்போது முழுவதுமாக கார் ரேஸில் இறங்கி இருக்கிறார். இவரது கார் பந்தயங்களுக்கான வீடியோக்களை தனியாக ஒரு யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகிறது.
யூடியூப் சேனல் தொடங்கிய அஜித்
ஆரம்பத்தில் அஜித் தன்னுடைய சொந்த விஷயங்களை மிகவும் மறைமுகமாக வைத்துக் கொள்வார். ஆனால் சமீபகாலமாக அஜித்தின் குடும்பப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. மேலும் ஷாலினியும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
அதோடு சமீபத்தில் அஜித் பத்மபூஷன் விருது வாங்கி இருந்தார். இதனால் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இண்டர்வியூ கொடுத்திருந்தார். அப்போது கார் ரேசிங் செய்யும் போது படங்களில் நடிக்க மாட்டேன் என்று அஜித் கூறியிருந்தார்.
ஏனென்றால் ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்தால் கண்டிப்பாக தோல்வி ஏற்படும். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தன்னை வைத்து படங்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இருப்பது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும் கூறியிருந்தார். இப்போது அஜித் ரேசிங் வீடியோ ஒளிபரப்பாகும் சேனலில் குறைந்த நேரத்தில் அதிக சப்ஸ்க்ரைபர்கள் குவிந்துள்ளனர்.