துணிவு கொடுத்த தைரியம், கண்டிஷன் போட்ட அஜித்.. அவசர ஆலோசனையில் லைக்கா

நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஏகே 62 திரைப்படத்தின் அறிவிப்பு எப்போது தான் வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்கேற்றார் போல் படம் குறித்து வெளிவரும் செய்திகளும் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி ஏகே 62 பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவர இருக்கிறது.

இதை இயக்குனர் மகிழ் திருமேனி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார். லைக்கா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தற்போது தயார் நிலையில் இருக்கிறது. அதிலும் படத்தின் பெயரை அறிவித்த தேதியிலேயே ஷூட்டிங்கை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையிலேயே 10 நாட்கள் இடைவிடாத படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். அதையடுத்து முழு மூச்சாக ஷூட்டிங்கை நடத்தி முடித்து விட பிளான் செய்யப்பட்டிருக்கிறது. எதற்காக இவ்வளவு அவசரம் என்று பலருக்கும் தோன்றலாம். ஏற்கனவே படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டதில் அதிக கால தாமதம் ஆகிவிட்டது. இதில் படப்பிடிப்பும் இழுத்தடித்தால் அஜித் போட்ட திட்டமே தலைகீழாக மாறிவிடும் என்பதற்காக தான் இந்த அவசரம்.

அப்படி என்ன திட்டம் என்றால் ஏகே 62 படத்தை லியோவுடன் மோதுவதற்கு அஜித் ஆசைப்படுகிறாராம். ஏற்கனவே துணிவு, வாரிசு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதி தமிழகத்தையே அதிர வைத்தது. அதிலும் துணிவுக்கு கிடைத்த வரவேற்பு அஜித்தை மிகுந்த உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. அந்த தைரியத்தில் தான் அவர் இப்போது அடுத்த படத்தையும் விஜய்யுடன் மோதுவதற்கு விரும்புகிறார்.

இனிமேலும் இந்த போட்டியை தொடரலாம் என்ற முடிவிலும் அவர் இருக்கிறாராம். அஜித்தின் இந்த கண்டிஷனை கேட்ட தயாரிப்பு தரப்பு தற்போது அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்களாம். ஏனென்றால் இப்போது படத்தை ஆரம்பித்தால் குறிப்பிட்ட மாதத்திற்குள் முடித்து விட முடியுமா என்ற பயம் தான் காரணம்.

மேலும் விஜய்யின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது படு வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் மே மாத இறுதிக்குள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த கட்ட பணிகளை ஆரம்பிக்கவும் லோகேஷ் கனகராஜ் தீவிரம் காட்டி வருகிறார். இந்த சூழ்நிலையில் இரு படங்களும் மோதுவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனாலும் ரசிகர்கள் மீண்டும் ஒரு நேரடி தாக்குதலை பார்க்கும் ஆர்வத்தில் இருக்கின்றனர்.