அஜித் புது கெட்டப்பில் மொட்டை அடித்துக் கொண்டு சுற்றி திரிகிறார். துபாயில் அடுத்த மாத இறுதியில் நடக்கும் கார் பந்தய போட்டிகள் முடிந்த பிறகு இந்தியா திரும்புகிறார். வந்தவுடன் அடுத்த பட வேலைகளை ஆரம்பிக்கவிருக்கிறார் அதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே அஜித் தரப்பிலிருந்து சுரேஷ் சந்திரா செய்து வருகிறார்.
அஜித்தின் குட் புக்கில் ஒருவர் இடம் பெற்று விட்டால் கடைசி வரை அஜித் அவரை விட்டுக் கொடுக்க மாட்டார். அப்படித்தான் குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை கவர்ந்து விட்டார். இப்பொழுது அஜித்தின் அடுத்த படத்தை அவர்தான் இயக்கவும் போகிறார்.
அஜித் 200 கோடிகள் சம்பளம் கேட்கிறார் அதனால் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதில் பெரிய கேள்விகள் எழுந்தது. ஆனால் இப்பொழுது அந்த படத்தை வேல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
ஐசரி கணேஷ் தற்போது தான் தன் மகளின் கல்யாணத்தை மிக ஆடம்பரமாக செய்தார். அதனால் இந்த வேலைகள் சிறிது காலதாமதம் ஆனது. ஆனால் இப்பொழுது எல்லா முடிவையும் தெளிவாக எடுத்து விட்டனர். இப்பொழுது ஆதிக், ஸ்டோரி டிஸ்கஷன் வேலையில் இறங்கியுள்ளார்.
பொதுவாக தயாரிப்பாளர்கள் செலவில் தான் இந்த வேலைகள் அனைத்தும் நடக்கும் ஆனால் அஜித் இம்முறை அவர் சொந்த செலவில் எல்லாத்தையும் பார்த்து வருகிறார். அது மட்டும் இன்றி அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மற்றும் ஆதிக் இருவரும் சென்று அனிருத்தையும் பேசி முடித்து விட்டனர். தயாரிப்பாளர் மாறினாலும் கூட இந்த டீமை விடக்கூடாது என இப்போது வளைத்து விட்டனர்..