அஜித்தை உச்சி குளிர செய்த 2வது இயக்குனர்கள்.. ஆதிக் பிரஷரை குறைத்து ஏகே கொடுத்த தங்கப்பதக்கம்

ஆதிக் ஒரு இயக்குனரையும் தாண்டி அஜித்தின் தர லோக்கல் ரசிகர் என்பதை குட் பேட் அக்லீ படத்தில் காண்பித்து விட்டார். படம் நன்றாக இருக்கிறது என்ற விமர்சனம் தான் எல்லா பக்கத்திலும் இருந்தும் வருகிறது. அஜித்தின் குட்வில் புக்கில் நீங்காத இடம் பெற்று விட்டார் ஆதிக்

படத்தின் ரிலீஸ் நாளை விட அஜித் படத்தைப் பார்த்த க்க அந்த நாள் தான் ஆதிக் உச்சகட்ட டென்ஷனில் இருந்துள்ளார். அஜித் ரசிகர்கள் அனைவரையும் இந்தப் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் படி செய்துவிட்டார் ஆதிக். இதற்கு முன்னால் இப்படி கொண்டாடப்படுவதை ஒருமுறை பார்த்துள்ளார் அஜித்.

அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது ,முதல் காட்சியை பார்த்த விஜய் ரசிகர்களும் படம் நல்லா இருக்கு என்று தான் கூறி வருகிறார்கள். இந்த படத்தில் இன்டர்வெல் ப்ளாக்கில் அஜித் கூறும் வசனம் தான் விஜய் ரசிகர்களுக்கும் அஜித்தை பிடிக்கும் படி செய்துள்ளது. “நண்பா ஐ அம் வெயிட்டிங்” என்ற ஒரு வசனத்தை பேசுகிறார் அஜித்.

இந்த வசனம் தான் அனைத்து தியேட்டர்களிலும் ஆரவாரத்தை அள்ளி வீசுகிறது. விஜய் அரசியலில் இறங்கி அடிக்க போகும் வெற்றியைத் தான் அஜித் அப்படி சூசகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும். அதனால் தான் நண்பனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்பது போல் சித்தரித்து கொண்டாடுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க முதன்முதலாக படத்தை பார்த்த அஜித் தன்னை சந்தோஷப்படுத்திய இரண்டாவது இயக்குனர் நீதான் என ஆதிக் இடம் கூறியுள்ளார். இதற்கு முன் மங்காத்தா படத்தில் வெங்கட் பிரபு அஜித்தை உச்சி குளிரசெய்துள்ளார். இப்பொழுது அதே சந்தோஷத்தை இந்த படத்தில் அனுபவித்துள்ளார் ஏ கே.