எம்ஜிஆர் யுக்தியை பாலோ பண்ண நினைக்கும் அஜித்.. விஜய்யுடன் போட்டி போட விரும்பாத ஏகே

Actor Ajith and Vijay: அஜித் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு தரமான படத்தை கொடுத்தார் என்றால் அது இந்த வருட பொங்கலை ஒட்டி வெளிவந்த துணிவு திரைப்படம் தான். அதுவும் எப்படி என்றால் விஜய்யுடன் போட்டி போட்டுக் கொண்டு வாரிசு படத்துக்கு எதிராக துணிவு திரைப்படம் வெளிவந்தது.

இப்படி ஒரு சம்பவத்தை யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அஜித் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இருந்தது. இதனை அடுத்து தொடர்ந்து இதே மாதிரியான சம்பவங்கள் வரும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் அடுத்த படமான விடாமுயற்சி ஏதோ காரணங்களால் படபிடிப்பு ஆரம்பிக்கப்படாமலே இருக்கிறது.

இது எதார்த்தமாக நடந்திருந்தாலும் இதே பயன்படுத்தி அஜித் ஒரு புதிய திட்டத்தை உருவாக்க இருக்கிறார். அதாவது விஜய் அவர் நினைத்தபடி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அடுத்ததாக அரசியலிலும் இவருடைய கொடியே நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக அதற்கான ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார்.

இந்த விஷயத்தில் அஜித் போட்டி போட விரும்பவில்லை. ஆனால் அதற்கு பதிலாக விஜய் எந்த அளவிற்கு அடிக்கடி ரசிகர்களை சந்தித்துக் கொள்கிறாரோ அதே மாதிரி சில விஷயங்கள் செய்ய இருக்கிறார். அத்துடன் விடாமுயற்சி படத்திலிருந்து வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார்.

அந்த வகையில் படத்தை எடுத்து முடித்துவிட்டு அது சம்பந்தமாக ரசிகர்களை சந்தித்து பேச்சு வார்த்தையை பின்பற்றப் போகிறார். இதே மாதிரி தான் கடந்த காலத்தில் எம் ஜி ஆர் இந்த யுக்தியை பயன்படுத்தி ரசிகர்களை தன்வசம் வைத்திருந்தார். அதையே தான் தற்போது அஜித் பாலோ பண்ண இருக்கிறார்.

இனிமேல் வரும் படங்களில் அந்த விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தி ரசிகர்களை பார்க்கப் போகிறார். அதற்காக விஜய்யுடன் எந்த விஷயத்திலும் போட்டி போட விரும்பாததால் இவருக்கு என்று சினிமாவில் தனி பாதையை அமைத்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.