இதிலும் விஜய்க்கு போட்டியான அஜித்.. துணிவு கதையில் இருக்கும் சீக்ரெட்

விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி கொண்டு இருக்கிறது. வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சரத்குமார் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு உலக அளவில் வெளியாக இருக்கிறது.

அதேபோன்று எச் வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றி இருக்கும் உதயநிதி ஸ்டாலின் வாரிசு படத்திற்கு போட்டியாக துணிவு திரைப்படத்தை களம் இறக்குகிறார்.

இதுவே பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது இரு படங்களுக்கு இடையில் இருக்கும் மற்றொரு ஒற்றுமையும் வெளியாகி இருக்கிறது. அதாவது ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த கலவையாக உருவாகி இருக்கிறது. சமீபகாலமாக ஆக்சன் படங்களில் மிரட்டி கொண்டிருக்கும் விஜய் இந்த வாரிசு படத்தில் ஆக்சன் மட்டுமின்றி சென்டிமென்ட்டிலும் கலக்கி இருக்கிறார்.

இதனாலேயே இந்த படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கு நேர் மாறாக துணிவு திரைப்படம் அதிரடி ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த திரைப்படமும் முழுக்க முழுக்க சென்டிமென்ட் காட்சிகள் அடங்கிய கதையாக தான் உருவாகி இருக்கிறது.

இதை பட குழு படு சீக்ரட்டாக வைத்திருக்கிறார்கள். கதைப்படி அஜித் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைக்காக எடுக்கும் பழிவாங்கும் படலம் தான் இந்த துணிவு திரைப்படத்தின் கதை. அதிலும் தன் குழந்தைக்காக அஜித் ஒரு அப்பாவாக போராடும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை கண்கலங்க வைக்குமாம்.

இப்படி சென்டிமென்ட் காட்சிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ஆக்சன் காட்சிகளும் அனல் பறக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். அந்த வகையில் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் இடையே ரிலீசில் மட்டும் அல்லாமல் கதையிலும் ஒரு பயங்கர போட்டி நடக்க இருக்கிறது. இதில் யாருக்கு வெற்றி என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.