விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசை அமைக்கிறார். வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் மும்மரமாக நடந்து வருகிறது. இப்படத்தை பொங்கல் ரிலீசுக்கு படக்குழு தயார் செய்து வருகிறது.
அதேபோல் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.இப்படமும் பொங்கல் ரிலீசுக்காக தயாராகி வருவதாக கூறப்பட்டது. வீரம், ஜில்லா படத்திற்கு பிறகு அஜித், விஜய் படங்கள் சேர்ந்து வெளியாகவில்லை.
இதனால் இந்த வருட பொங்கல் இரு ரசிகர்களுக்கும் விருந்தாக அமைய உள்ளது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அஜித்தின் ஏகே61 படம் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கி உள்ளது. அதாவது வாரிசு படத்தின் சூட்டிங் முக்கால்வாசி முடிந்துவிட்டது.
அதுமட்டுமின்றி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியிட உள்ளனர் ஆனால் அஜித்தின் ஏகே 61 படத்தில் இன்னும் 75 சதவீத படப்பிடிப்பு கூட முடியவில்லையாம். பேங்காங்கில் 35 நாட்களுக்கு ஃபைட் சீன் மீதம் இருக்கிறதாம். மேலும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் உள்ளதாம்.
இதனால் கண்டிப்பாக இந்த ஆண்டு பொங்கல் ரிலீசுக்கு அஜித்தின் ஏகே 61 படத்தை வெளியிட முடியாது. அஜித், விஜய் படத்தை ஒரே நேரத்தில் வெளியிட்டால் இரண்டு ரசிகர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என போனிகபூர் திட்டம் தீட்டி இருந்தார்.
ஆனால் அஜித் சூட்டிங்கை பொறுமையாக பண்ணலாம். பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என பின் வாங்கி உள்ளார். இதனால் தான் தற்போது சூட்டிங்கை தள்ளி வைத்துவிட்டு அஜித் பைக் பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது.