அஜித் கொடுத்த அட்வைஸ், பிடிவாதமாக இருக்கும் ஆதிக்.. GBU படத்தின் வெற்றிக்கு பிறகு வெளிவந்த இரகசியம்

GBU: தற்போது அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு விஷயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி தான். படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக அஜித்தின் தீவிர ரசிகராக இருக்கும் ஆதிக் அவருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக அஜித் படம் வர வேண்டும் என்பதை கவனத்தில் வைத்து குட் பேட் அக்லி படத்தை கொடுத்திருக்கிறார்.

இதில் அஜித்துக்கு திரிஷா ஜோடியாக நடித்திருந்தாலும் அனைவரையும் கவர்ந்தது ஸ்பெஷலாக வந்த சிம்ரன் தான். அத்துடன் அர்ஜுன் தாஸ் மற்றும் பிரியா வாரியர் கதாபாத்திரமும் பக்காவாக அமைந்துவிட்டது. அஜித் இதில் ரெட் டிராகன் என்று கேங்ஸ்டர் ஆக மாஸ் காட்டிவிட்டார். இந்த ஒரு படம் போதும் எங்களுடைய AK வை கொண்டாடுவதற்கு என்று ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி படம் சொதப்பினாலும் இப்படம் எல்லாத்தையும் மறக்கடித்து விட்டு அஜித்துக்கு ஒரு மாஸ் இடத்தை கொடுத்து விட்டது. தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆதிக் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்படி கொடுத்த பேட்டியில் அஜித் கொடுத்த அட்வைஸ் பற்றி சொல்லி இருக்கிறார்.

அதாவது அஜித் சொன்னது என்னவென்றால் உன்னிடம் நிறைய திறமை இருக்கிறது, அதை இப்படியே கொண்டுட்டு போகாமல் அடுத்து பெருசாக சாதிக்கும்படி உன்னை தயார்படுத்திக்கோ. அத்துடன் உன்னுடைய வெற்றியை தலையில் எடுத்துக் கொள்ளாதே அதை போல் தோல்வியையும் உன் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் எல்லாத்தையும் விட்டு விட்டு வெற்றியை நோக்கி பயணம் செய் என்று சொன்னதாக ஆதிக் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும் இப்படி அஜித் ஒரு அட்வைஸ் கொடுத்தாலும் ஆதிக் பிடிவாதமாக சொன்ன விஷயம் என்னவென்றால் அடுத்து அஜித்தை வைத்து மறுபடியும் ஒரு படம் நிச்சயம் எடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அந்த படம் ஒரு மங்காத்தா மாதிரி மாஸ் கதையுடன் இருக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் தற்போது வெளிவந்த குட் பேட் அக்லி படத்திற்கு டைட்டில் என்ன வைப்பது என்று தெரியாமல் மொத்த டீமும் அலைந்த பொழுது அஜித் கூப்பிட்டு குட் பேட் அக்லி வைத்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார்.

அவர் கேட்டதுமே இந்த படத்திற்கு ஏற்ற மாதிரி ரொம்பவே பொருந்தியதாக இருந்தது. உடனே அதே டைட்டில் வைத்து விட்டோம் என்ற ரகசியத்தை ஆதிக்கு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆக மொத்தத்தில் இப்படம் முழுக்க முழுக்க அஜித்தின் ரசிகர்களுக்கும் இப்பொழுது குழந்தைகளுக்கு தெரியும் வகையில் அஜித்தின் பழைய படங்களும் கை கொடுத்திருக்கிறது.