லோகேஷ் யுனிவர்சில் மிரட்டப் போகும் அஜித்தின் AK-63.. ரோலக்ஸ் கெட்டப் எல்லாம் வெறும் சாம்பிள் தான்

பொங்கலுக்கு ரிலீசான அஜித்தின் துணிவு படம் இதுவரை உலகெங்கும் 200 கோடியை தாண்டி வசூலில் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 நடிக்க உள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார்.

இதன் பின் ஏகே 63 படத்தை குறித்த தகவல் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. ஏகே 63 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் ரோலக்ஸ் கெட்டப் எல்லாம் வருகிறது. ஆனால் அதெல்லாம் வெறும் சாம்பிள் தான். அஜித்காக வேற லெவலில் லோகேஷ் இந்த படத்தின் கதையை யோசித்து வைத்திருக்கிறார்.

வழக்கமாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களை எல்லாம் லோகேஷ் யுனிவர்ஸ் மூலம் உருவாக்குகிறார். இதனால் அவர் எடுக்கும் படங்களின் கதாபாத்திரங்களும் அடுத்தடுத்த படங்களில் தொடரும். அப்படி லோகேஷ் கனகராஜ் உலக நாயகனை வைத்து இயக்கிய விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் தோன்றினாலும் படத்தை பார்ப்போரை மிரட்டி விட்டது.

அந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ஏகே 63 படத்தில் இருக்கிறது. அதிலும் ரோலக்ஸ் மற்றும் ராய்ஸி இருவருக்கும் அஜித் குமார் மூத்த அண்ணனாக படத்தில் நடிக்கப் போகிறார். இதில் ரோலக்ஸ் போதைப் பொருள் சாம்ராஜ்யத்தின் ஆணிவேராகவும், ராய்ஸி கள்ள துப்பாக்கிகளை டீல் செய்யும் கூட்டத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

இவர்களுக்கெல்லாம் மூத்த அண்ணனாக நடிக்கும் அஜித், தாய்லக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் ஆயுர்வேத மெடிசன் மற்றும் எண்ணெய் டீலிங் செய்யும் கேரக்டரில் மிரட்டப் போகிறார். இவ்வாறு ஏகே 63 படத்தில் அஜித் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடிப்பது மட்டுமில்லாமல் அவர்களது ரணகளமான கதாபாத்திரம் என்ன என்பதும் தற்போது வெளியாகி படத்தை குறித்த எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளது.

இந்த படம் விக்ரம் படத்தை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பயங்கர கேங்ஸ்டர் படமாக லோகேஷ் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் இயக்கும் ரொமான்ஸ் மற்றும் காமெடி ஜூனரில் உருவாகும் ஏகே 62 படத்தை காட்டிலும், அதிரடி ஆக்சன் படமாக துணிவு படுத்திருக்கும் பின் வெளியாக இருக்கும் ஏகே 63 படத்தை குறித்த எதிர்பார்ப்பு தல ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.