AK64 இயக்குனர் இவரா.? அடுத்த மாஸ் காம்போவில் அஜித் கூட்டணி

Ajith : அஜித்துக்கு விடாமுயற்சி கைவிட்டாலும் குட் பேட் அக்லி படம் வாரி கொடுத்துள்ளது. அந்த வகையில் வெளியான சில நாட்களிலேயே 100 கோடியை தாண்டி இப்படம் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தை யார் இயக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில் எக்ஸ் தளத்தில் ஏகே 64 என்று டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அதில் அடுத்ததாகவும் அஜித்தின் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தில் கதை இல்லாமல் அஜித்தின் ஃபேன் பாயாக படத்தை எடுத்திருந்தார் ஆத்க்.

அஜித்தின் AK 64 இயக்குனர்

ஆனால் அடுத்த முறை நல்ல கதையுடன் கூடிய ஒரு படத்தை அஜித்துக்காக எடுப்பார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அஜித்தின் லிஸ்டில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பிரசாந்த் நீல் போன்ற நடிகர்களும் இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவிஸ் மீண்டும் அஜித் உடன் இணைய இருக்கிறது. அந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கட் அல்லூரி இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு அஜித்துக்கு வரிசை கட்டி இயக்குனர்கள் இருந்தாலும் ஏகே 64 படத்தை யார் இயக்குவார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதுவும் அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.