Actor Ajith: அஜித் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இந்த வருடம் பொங்கல் தினத்தன்று வெளிவந்த துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டான இவர் பல காரணங்களால் படப்பிடிப்பை தொடங்க முடியாமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது.
அத்துடன் சினிமாவில் நடிப்பது இவருடைய ரசிகர்களுக்காக மட்டும்தான் என்று சொல்லி அவ்வப்போது ஒரு படங்களை கொடுத்து வருகிறார். மேலும் எந்த அளவிற்கு குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசம் இருக்கிறதோ, அதற்கு இணையாக இவர் அதிகம் ஆர்வம் காட்டுவது பைக் ரேஸ். அந்த வகையில் சமீபத்தில் கொஞ்ச மாதமாக வேர்ல்ட் டூர் போய்ட்டு வந்தார். இப்படி அவருக்கு தோன்ற விஷயங்களை மட்டும் அதிக ஆர்வம் எடுத்து செய்து வருகிறார்.
இதற்கிடையில் ஹீரோவாக வளர்ந்து வந்த காலங்களில் இவருக்கு இடைஞ்சலாக பல அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் தன்னம்பிக்கை மூலம் மீட்டெடுத்து தற்போது முன்னணி நடிகராக வந்து விட்டார். அப்படிப்பட்ட இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு கிட்டத்தட்ட 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். தற்போது இவருடைய சொத்து மதிப்பு மிகவும் பிரமிக்க வைக்கிற அளவிற்கு இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.
கிட்டத்தட்ட 200 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். சினிமாவில் கிடைக்கும் வருமானத்தையும் தாண்டி இவர் நடிக்கும் படங்களில் வரும் லாபத்தில் ஒரு பங்கை வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பல நிறுவனங்களில் பிராண்ட் அம்பாசிடர் ஆகவும் இருந்து வருகிறார்.
மேலும் இவர் பெயரில் பல தொழில்கள் மற்றும் முதலீடுகளை செய்திருக்கிறார். அத்துடன் சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு பார்ட்னர்ஷிப்பாக இருக்கிறார். இவருடைய ப்ரொடக்ஷனில் தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கிறார். அந்த வகையில் இவருடைய தனிப்பட்ட முதலீடுகள் என்று சுமார் 40 கோடி கிட்ட வைத்திருக்கிறார்.
இதுபோக 25 கோடி மதிப்பிலான தனி ஜெட் விமானம், சென்னையில் ஒரு ஆடம்பரமான பங்களா, 36 கோடி மதிப்புள்ள பைக் மற்றும் கார்களை வைத்திருக்கிறார். அத்துடன் 34 கோடி மதிப்பில்லான லம்போர்க்கினி, BMW 7- சீரிஸ் 740Li Aprilla Caponard பைக், BMW S1000 RR பைக் மற்றும் BMW L1300 S பைக் ஆகியவை வைத்திருக்கிறார். மேலும் ஒவ்வொரு பைக்குகளின் விலை 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.