Good Bad Ugly First Day Collection : அஜித்தின் குட் பேட் அக்லி படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் பேன் பாய் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்து விட்டார்.
கதைக்காக ஆடியன்ஸ் படத்திற்கு செல்லாமல் நல்ல என்டர்டைன்மென்ட் செய்யும் வகையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார். அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி மற்ற ஹீரோக்களின் ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்திருக்கிறது.
ப்ரீ புக்கிங்கில் இந்த படம் பல கோடி வசூலை அள்ளியது. இந்த சூழலில் முதல் நாளில் குட் பேட் அக்லி நல்ல கலெக்ஷனை செய்துள்ளது. இந்த வருடம் தொடக்கத்திலேயே அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியானது.
குட் பேட் அக்லி முதல் நாள் கலெக்சன்
இப்படம் முதல் நாளில் 22 கோடி வசூலை பெற்றது. ஆனால் குட் பேட் அக்லி 29 கோடி வசூலை பெற்றிருக்கிறது. இதற்கு முன்னதாக அஜித்தின் கேரியரில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் வலிமை தான்.
அதாவது வலிமை படம் 28 கோடி முதல் நாள் கலெக்ஷன் செய்திருந்தது. இப்போது அதை முறியடித்துள்ளது குட் பேட் அக்லி. மேலும் சனி, ஞாயிறு மற்றும் தமிழ் வருடப்பிறப்பு ஆகிய தொடர் விடுமுறை காரணமாக நல்ல வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் 500 கோடி வசூல் கன்ஃபார்ம் என்று சொல்லப்படுகிறது. துணிவுக்குப் பிறகு அஜித்துக்கு ஒரு நல்ல கம்பேக்கை குட் பேட் அக்லி படம் மூலம் ஆதிக் கொடுத்துள்ளார்.