Actor Ajith: அஜித் விரைவில் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷனில் உருவாகும் இந்த படம் பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்காமல் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அதற்குள் அஜித் பைக் சுற்றுப்பயணமும் தொடங்கி விட்டார்.
ஆனால் இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் விடாமுயற்சி படத்திற்கான மற்ற நடிகர் மற்றும் நடிகைகளை படக்குழு தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகிறது. மேலும் துணிவு படத்தில் அஜித்தின் தோற்றம் பலராலும் ரசிக்கப்பட்டது.
அதேபோல் விடாமுயற்சி படத்திலும் பிட்டாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக அஜித் உடல் எடையை குறைத்து வருகிறார். அவ்வாறு அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருந்தது. அந்த வகையில் இன்று அஜித்தின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதாவது தனது ரசிகர்களுடன் அஜித் இந்த புகைப்படத்தை எடுத்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்க்கும்போது துணிவு படத்தை காட்டிலும் உடல் எடையை குறைத்துள்ளது நன்றாக தெரிகிறது. மேலும் அஜித் ரசிகர்களால் இந்த புகைப்படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அடிக்கடி அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் விடாமுயற்சி படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டு அழுத்துவிட்டனர். ஆகையால் இந்த முறை மிஸ் ஆகாது கண்டிப்பாக விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.