கிணற்றில் போட்ட கல் மாதிரி மெத்தனம் காட்டும் அஜித்.. படாத பாடுபடும் ஃபேன் பாய் ஆதிக்

அஜித்தின் குட் பேட் அக்லி படம் ஓரளவு கல்லா கட்டி விட்டது. உலக அளவில் 200 கோடிகள் வசூலை தள்ளியது. மொத்தமாக 270 கோடிகள் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ்க்கு 70 கோடிகள் நஷ்டம்.

பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதற்கு காரணம் ஹீரோக்களின் சம்பளம். அஜித் போன்ற மாஸ் ஹீரோக்கள் 180 கோடிகள் முதல் 220 கோடிகள் வரை சம்பளம் கேட்கிறார்கள். அதன் பின் பெரிய பட்ஜெட் என்று எல்லாத்தையும் கொடுத்த பிறகு படம் கலெக்ஷனில் எப்படி கல்லா கட்ட முடியும்.

அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கப் போவது ஆதிக்ரவிச்சந்திரன் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டாலும் அதன்பின் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார்.

இதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அஜித்தின் அனுமதி இல்லாமல் அனு கூட அசையாது அதை போல் தான் இதுவும் கிணற்றில் போட்ட கல் மாதிரி கிடக்கிறது. இதனால் ஆதிக்ரவிச்சந்திரன் தான் அச்சத்தில் இருக்கிறார். என்னதான் ரோமியோ பிக்சர்ஸ் வலிய வலிய வந்தாலும் அஜித் காதில் எதையும் போட்டுக் கொள்வதில்லை.

இப்பொழுது அஜித் துபாயில் இருக்கிறார். கார் ரேஸ்க்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அடுத்த படம் நவம்பர் மாதம் தான் ஷூட்டிங், அதுவரை துபாயில் தான் இருப்பாராம். படத்திற்கு நீண்ட நாட்கள் அவகாசம் இருப்பதால், ஏன் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என மெத்தனம் காட்டி வருகிறார் ஏ கே. ஆனால் மறுபக்கம் இயக்குனரும். தயாரிப்பாளரும் ஸ்கிரிப்ட் சம்பந்தமான வேலைகளை பார்க்க வேண்டும் என திணறி வருகிறார்கள்.