அஜித் : தல தல என்று ரசிகரள் உயிரை கொடுக்கும் அளவுக்கு அஜித்தின் மேல் ஓயாத அன்பும், பற்றுதலும் வைத்திருக்கின்றனர். அஜித் அமைதியாக தன் வெற்றிகளை குவித்து வருகிறார். எனக்கு ரசிகர்களே வேண்டாம் என்று சொன்னாலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் குறைவதில்லை
எதிர்பாராத விதமாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தோல்வியில் முடிந்தாலும் மனம் தளராமல் புதுமுக இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுடன் கூட்டணி போட்டார். அவரது இந்த முயற்சி கைவிடவில்லை. குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது.
தற்போது எந்த திரைப்படத்திலும் நாட்டமில்லாமல் தனது கார் ரேசிங்கில் விடாமல் கவனம் செலுத்தி வருகிறார். எந்த வேலையானாலும் விரும்பி செய்யும் குணம் கொண்ட அஜித்க்கு சினிமாவில் பல பட வாய்ப்புகளும் தவறி போயிருக்கிறது.
தவறவிட்ட வாய்ப்பு..
இயக்குனர் கௌதம் மேனன், அஜித் மற்றும் சமீராவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க பல வருடங்களுக்கு முன்பு திட்டமிட்டு கொண்டிருந்தார். இது அஜித்தின் 53வது திரைப்படமாக எடுக்கப்பட இருந்தது. படத்திற்கு சுராங்கனி என்று பெயர் வைக்கபட்டது.
ஆனால் சில காரணங்களால் இந்த திரைப்படம் கைவிடப்பட்டது. சுராங்கனி என்பது சுறா மற்றும் கனி என்று இரு கதாபாத்திரங்களை குறிக்கிறது. இந்த கதையில் அஜித் நடித்திருந்தால் நிச்சயம் படம் ஒரு நல்ல வெற்றியை கொடுத்து இருக்கும் என எதிர்பார்ப்பு கௌதம் மேனனிடம் இருந்தது.
தூத்துக்குடி, திருநெல்வேலி இந்த இடத்தில் எல்லாம் படத்தை எடுக்க பிளான் செய்து வைத்திருந்தனர். இந்த திரைப்படத்தின் போஸ்டர் கூட அந்த சமயத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் திரைப்படம் அஜித்துக்கு கை கூட வில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.