அஜித் எடுக்கும் புதிய முடிவு.. நடப்பதை பார்த்து அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன!

Actor Ajith: துணிவு படத்திற்கு பிறகு தன் பைக் ரைடிங்கில் ஆர்வம் காட்டி வரும் அஜித் மேற்கொள்ளும் விடாமுயற்சி படம் குறித்த அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இவர் எடுக்கும் புதிய முடிவு பற்றிய தகவலை இங்கு காண்போம்.

அவ்வாறு துணிவு படத்திற்கு பிறகு பல மாற்றங்களை செய்யலாம் என முடிவெடுத்திருந்தார். மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடிய இவர் ஒரு வருடத்திற்கு குறைந்தது இரண்டு படம் அல்லது மூன்று படமாவது நடிக்க வேண்டும் என ஒரு முடிவு வைத்திருந்தார்.

அதன் பிறகு இவரின் ஆர்வம் வேறு திசையில் சென்றதனால் சினிமாவில் படம் நடிப்பதை விட்டுவிட்டு பைக் டூருக்கு வெளியூர் சென்று விட்டார். மேலும் இவர் மேற்கொள்ள இருந்த விடாமுயற்சி படமும் இழுபறியாகவே இருந்து வந்தது.

இரண்டு மூன்று மாதத்தில் திரும்பி விடுவேன் என சொல்லிய இவர் வர தாமதமானது அதன் பிறகு படப்பிடிப்பு தரப்பில் பைனான்ஸ் ரீதியான ரைடு பிரச்சனையில் மாட்டிக் கொண்டார்கள். தொடர்ந்து இது போன்ற பல சிக்கல்களை சந்தித்து வந்தது விடாமுயற்சி படம். ஏதோ ஒரு கெட்ட நேரம் இந்த வருடம் இப்படம் இழுத்துக் கொண்டே செல்கிறது.

இது ஒரு பக்கம் இருப்பினும் தமிழ்நாட்டில் நடக்கும் சூப்பர் ஸ்டார் பிரச்சனை, விஜய்- ரஜினி மோதல் எதையுமே கண்டுக்காது அனைத்தையும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் தன் படம் குறித்து எந்த ஒரு பேச்சும் வெளியிடாது அமைதி காத்து வருகிறார்.

இந்த அமைதிக்கு பின் ஏதோ ஒரு விளையாட்டு விளையாட போகிறார் என்பது மட்டும் தெரிகிறது ஆனால் அது என்னவென்று தான் தெரியவில்லை. இப்படத்திற்கு பிறகு அடுத்த வருடத்திற்கு மூன்று படங்களை நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது அவரே எடுத்த முடிவாகவும் பார்க்கப்படுகிறது. இவர்கள் அடித்துக் கொள்ளும் போது அமைதியாக இருந்து தன் ஆட்டத்தை மெதுவாக ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் போல என பிரபலங்கள் கூறி வருகின்றனர்.