விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி, ரஜினிகாந்த், சூர்யா என அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வைத்து இயக்கிய இயக்குனருக்கு இப்பொழுது அஜித்தை வைத்து இயக்கும் படமும் கைகூடி வந்துள்ளது. அஜித் இப்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் மீண்டும் நடிக்க உள்ளார்.
இந்த படம் முடிந்த பிறகு அடுத்த படத்திற்கான அப்டேட்டும் இப்பொழுது கிடைத்துள்ளது. தனுஷ் அஜித்க்காக ஒரு கதை வைத்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் இருவரும் இதுவரை சந்தித்துக் கொள்ளவே இல்லை. அவரவர் வேலையில் இருவரும் பிசியாக இருக்கிறார்கள்.
இப்பொழுது கார்த்திக் சுப்புராஜ் அஜித்திற்காக ஒரு கதை ரெடி பண்ணி உள்ளார். இதற்கு அஜித் தரப்பிலிருந்தும் பச்சைக்கொடி வந்ததால் இந்த கூட்டணி விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ்.
தயாரிப்பாளர்களை கவிழ்த்தாமல் கேரண்டியான படம் எடுத்து கொடுப்பவர் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா படத்தில் ஆரம்பித்து இன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரை இவர் படங்களுக்கு எப்பொழுதுமே மவுஸ் உண்டு. ரஜினியை வைத்து பேட்டை படத்தை இயக்கியிருந்தார்.
விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்புக்காக காத்திருந்தார் ஆனால் விஜய் சினிமாவிற்கு முழுக்கு போட்டதால் அந்த வாய்ப்பு நிறைவேறாமல் போய்விட்டது. இப்பொழுது அஜித்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த விஷயத்தை மிகவும் ரகசியமாக வைத்த போதிலும் வெளிவந்துள்ளது.