Actor Ajith : அஜித்தை போலவே அவரது மகன் ஆத்விக் ஸ்போட்ஸில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதுவும் குறிப்பாக கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்து வருகிறார் ஆத்விக்.
சமீபத்தில் அவரது பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில் கூட கேக் கால்பந்து ஆட்டத்தை குறிக்கும் விதமாகத்தான் தயார் செய்து வைத்திருந்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில் மறுநாளே தனது மகனின் விளையாட்டை பார்க்க மேட்ச் நடக்கும் இடத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பை ஓரம் வைத்துவிட்டு தனது மகனை இப்போது தயார் செய்து வருகிறார் ஏகே.
கால்பந்து விளையாட்டில் மிகவும் பிரபலமான கிறிஸ்டியானோ டொனால்டோவை போல தனது மகனை கொண்டு வருவதற்கான முயற்சியில் அஜித் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஆதிவிக் மேட்சுக்கு தயாராகும் நிலையில் அவருக்கு அஜித் ஷூவை போட்டு விடுகிறார்.
அந்தப் புகைப்படம் தான் இப்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. மேலும் அஜித்துக்கு சில நாட்கள் முன்புதான் அறுவை சிகிச்சை நடந்ததால் விடாமுயற்சி படப்பிடிப்பை தாமதமாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருக்கின்றனர்.
ஆகையால் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் வரை தனது மகன் மற்றும் குடும்பத்துடன் அஜித் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
மேலும் அஜித் போல் அவரது மகன் ஆத்விக் சினிமாவில் வர வாய்ப்பு குறைவாக இருந்தாலும் விளையாட்டு துறையில் கண்டிப்பாக நல்ல இடத்தை பிடிப்பார் என்பது இப்போதே தெரிகிறது.