விடாமுயற்சி படப்பிடிப்பில் கலவரம்.. கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்குன்னு ஆடுச்சாம்

Ajith In Vidamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த எட்டு மாதங்களாக இந்தா வருது அந்தா வருகிறது என்று புரளியை பரப்பிக் கொண்டு ரசிகர்கள் அனைவரையும் ரொம்பவே காக்க வைத்து விட்டார்கள். அந்த வகையில் ஒரு வழியாக விடாமுயற்சிக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்பதற்கு ஏற்ப நேற்று மொத்த படக் குழுவும் துபாய்க்கு சென்று அங்கே படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என கிளம்பி போனார்கள்.

அதாவது துபாயில் இருக்கும் அஜர் பைஜானில் படப்பிடிப்பை நடத்த திட்டம் போட்டிருந்தார்கள். ஆனால் அங்கே போன இடத்தில் லோக்கல் பிரச்சினை ஏற்கனவே இருந்திருக்கிறது. இந்த சமயத்தில் படப்பிடிப்பை அந்த இடத்தில் வைத்தால் இன்னும் தேவையில்லாத தலைவலி வந்துவிடும் என்பதற்காக அங்கு இருந்து அனைவரும் கிளம்பி விட்டார்கள்.

அடுத்தபடியாக அங்கிருந்து அனைவரும் நேரடியாக தாய்லாந்துக்கு போயிருக்கிறார்கள். அங்கே அதற்கான லொகேஷனை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். ஏற்கனவே யார் விட்ட சாபமோ தெரியல படம் பல மாதங்களாக இழுப்பறியில் இழுத்துக் கொண்டு படப்பிடிப்பை துவங்க கூட முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இதுல மறுபடியும் தினுசு தினுசாக பிரச்சனை வருகிறது. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு ஜுங்க ஜிங்குன்னு ஆடுச்சாம். அது மாதிரி இருக்கு விடாமுயற்சி படபிடிப்பு. அடுத்தபடியாக இந்தப் படத்தில் ஹுமா சலீம் குரேஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் இப்போ இவர் நடிக்க வில்லையாம். இவருக்கு பதிலாக ரெஜினா நடிக்கப் போகிறார். இப்படி தொடர்ந்து பல குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகளை சந்தித்து கொண்டு வருகிறது. மொத்தத்தில் இந்த படம் வருமா வராதா, வந்தாலும் இப்போதைக்கு எதிர்பார்க்கலாமா இல்லையென்றால் இன்னும் வருட கணக்கில் ஆக்குவார்களா என்பது ரசிகர்கள் ஆதங்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை இதுக்கெல்லாம் காரணம் விக்னேஷ் சிவனின் சாபமாக கூட இருக்கலாம். அதாவது அவரை ஆசை காட்டி கடைசி நிமிடத்தில் மோசம் செய்ததால் அவருடைய வயித்தெரிச்சல்னால இந்த படம் இப்படி அல்லோளப்பட்டு வருகிறதா என்றும் பலருக்கு கேள்வி எழுப்புகிறது. எது எப்படியோ விடாமுயற்சி படம் ஆரம்பிச்சு வரிசையாக ஒவ்வொரு அப்டேட்டுகள் வந்தால் தான் படத்திற்கு விடிவுகாலமே பிறக்கும்.