லியோவிற்கு பயத்தை காட்ட வரும் ஏகே 62 போஸ்டர்.. எப்ப ரிலீஸ் தெரியுமா?

விஜய்யின் தளபதி 67 படத்தின் டைட்டிலை ப்ரோமோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு சமீபத்தில் அறிவித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் லியோ படத்தை வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் லியோக்கு போட்டியாக தாறுமாறாக அஜித் களமிறங்க போகிறார். இதற்காக ஏகே 62 படத்தின் ப்ரோமோவை இன்னும் ஒரு சில தினத்தில் வெளியிடப் போகின்றனர். மேலும் ஏகே 62 இயக்குனர் மகிழ் திருமேனி இசை சந்தோஷ் நாராயணன் என பேசப்படுகிறது.

ஆனால் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. வியாழக்கிழமை ஆன நேற்று இதன் அப்டேட் வரும் என்று கூறப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. அதனால் வெள்ளி அல்லது சனிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதற்காக இந்த காலதாமதம் என்றால் விஜய்யின் லியோ மாதிரியே டைட்டிலுடன் மோஷன் போஸ்டரை பிரம்மாண்டமாக வெளியிட திட்டம்.

அதனால் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. கூடிய விரைவில் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இந்த மோஷன் போஸ்டர் அமையும். வெள்ளிக்கிழமை ஆன  இன்று இதைப்பற்றி என்னென்ன அப்டேட்டுகள் வரப்போகிறது என்று தெரியும்.

இதனால் தல ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்புடன் ஏகே 62 படத்தின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். அஜித் இந்த படத்தை லியோவை மிஞ்சும் அளவுக்கு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆகையால் வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு பிறகு அஜித், விஜய் இருவரின் போட்டி அணைந்த பாடில்லை.

இப்போதுதான் வேகம் எடுக்கிறது. அதிலும் லோகேஷ் கனகராஜின் லியோ வெறித்தனமாக தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அஜித்தும் விரைவில் ஏகே 62 படத்தின் முழு விவரம் அடங்கிய போஸ்டரை இன்றுவெளியிடப் போகிறார்.