துணிவு படத்தை தொடர்ந்து அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ்திருமேனி இயக்கம் உள்ளார். ஆனால் இதற்கான அறிவிப்பை மட்டும் இழுத்தடித்து வருகிறார்கள்.
ஆனால் இப்போது ஏகே 62 படத்திற்கான அலுவலகம் எல்லாம் தயார் நிலையில் உள்ளதாம். அதுமட்டுமின்றி ஏகே 62 படத்திற்கான மூன்று தலைப்புகளை தேர்வு செய்து வைத்துள்ளார்களாம். மேலும் பரிசீலனை செய்து இதிலிருந்து ஒரு தலைப்பை உறுதி செய்ய உள்ளனர்.
இந்த தலைப்புடன் வருகின்ற மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் படத்திற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும் இதில் அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏகே 62 படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற பிரபலங்களின் பெயரும் அறிவிக்க உள்ளனர்.
ஏனென்றால் விஜய்யின் லியோ படத்தின் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே படத்தின் பிரபலங்களையும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல் தான் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு படத்தில் நடிக்கும் பிரபலங்களின் பெயரையும் வெளியிட இருக்கிறது.
அந்த வகையில் ஏகே 62 படத்தில் முக்கிய வில்லன்களாக அருண் விஜய், அருள்நிதி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல வில்லன்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏகே 62 படத்தின் அனிருத் இசை அமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிப்பு வெளியான பிறகு மூன்றாவது வாரத்திலேயே படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். ஏனென்றால் இப்படம் தீபாவளி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஆகையால் இன்னும் ஒரு வாரம் அஜித் ரசிகர்கள் இந்த அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும்.