AK 64 படத்திற்காக சவால் விட்டிருக்கும் அஜித்.. அதுவும் அந்த பட்ஜெட்டிற்கு

Ajithkumar : நடிகர் அஜித்குமார் இறுதியாக வந்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தோடு அடுத்து எந்த அப்டேட்டும் கொடுக்காமல் ரேசிங்கில் கலந்து கொள்ள சென்று விட்டார். அந்த ரேசிங்கிலும் அவர் வெற்றிகரமான ஒரு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

சினிமா மற்றும் ரேசிங்கில் இணைந்தே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் அஜித். தற்போது தனது அடுத்தடுத்த படங்கள் பற்றிய அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

AK 64, AK 65, AK 66 என அஜித்குமார் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இப்போது “AK 64” பற்றி மீண்டும் ஒரு அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது “AK 64” படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி அஜித்குமார் அவர்களே தயாரிக்க போவதாக செய்திகள் வெளியாகி பரவி வருகின்றன.

AK 64 படத்திற்கு இவ்ளோ பட்ஜெட்டா..

அதை உறுதி செய்யும் வகையில் தற்போது வந்துள்ள அப்டேட் இருக்கிறது. அதாவது நடிகர் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார் இந்த படத்தை தயாரிக்க. அது மட்டுமல்லாமல் இந்த படத்தை 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார்களாம்.

மார்கோ புகழ் கலைகிங்ஸன் என்பவரை இந்த படத்திற்கு ஆக்சன் படக்காட்சிக்காக அழைக்கப் போகிறார்களாம். அப்போ கண்டிப்பா “AK 64” ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட தரமான சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவார் அஜித் என்பது உறுதியாக தெரிகிறது.

AK 64 படத்திற்காக நேருக்கு நேர் சவால் விட்டிருக்கும் அஜித்..

அதுவும் இந்த படத்திற்காக அஜித்குமார் அவர்கள் சம்பளம் பெறப்போவதில்லை என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது. ராகுல் நல்ல வியாபாரிதான் இருந்தாலும் , முதன் முதல் தயாரிக்கும் படம் என்பதால் அவருக்கு உதவும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளார் அஜித். இந்த படம் வெளியாகி OTT மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ்சை சம்பளமாக பெற்றுக்கொள்வாராம் அஜித் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன.

மேலும் இந்த படத்தை 2026 கோடைகாலத்தில் வெளியிட உள்ளதாகவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாம். அப்போ அஜித் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான், அஜித் நடித்தாலே படம் தாறுமாறாக இருக்கும். தற்போது அவரே இதை தயாரிக்கவும் உள்ளதால் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் படத்தின் ரிலீஸ்காக.