நடிகர் அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தில் உள்ள நிலையில், 2023 பொங்கலன்று விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் மோதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அஜித்தின் ரசிகர்கள் துணிவு திரைப்படத்தின் அப்டேட்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனிடையே அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.
இத்திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக நடிகை த்ரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட்காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏகே 63 திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது.
நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது சூர்யாவின் இயக்கத்தில் வரலாற்றுத் திரைப்படம் ஒன்றை எடுத்து வருகிறார். இதனிடையே அத்திரைப்படத்தை முடித்துவிட்டு ஏகே 63 படத்தை இயக்குவார் என பலரும் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது ஆரம்பம், பில்லா உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜித்தின் ஏகே 63 திரைப்படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜித்திற்காக பல வருடம் காத்திருந்த நிலையில் தற்போது இந்த வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. இதனால் அஜீத்திடம் கதை சொல்வதற்காக சென்னை வந்துள்ளார்.
இதனிடையே பாலிவுட்டில் ஷேர்ஷா என்ற பிரம்மாண்டமான ஹிட் திரைப்படத்தை இயக்கி அத்திரைப்படத்தின் மூலமாக சிறந்த இயக்குனர் என்ற பல விருதுகளையும் பெற்றார். இந்நிலையில் மும்பையிலேயே செட்டிலாகி உள்ள விஷ்ணுவர்தனை தொடர்பு கொண்ட அஜித், ஏகே 63 திரைப்படத்தை இயக்குமாறு பேசியுள்ளார். லைகா புரொடக்ஷன் உடன் இணைந்து அஜித்,விஷ்ணுவர்தன் காம்போவில் மூன்றாவது திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.