7 மாதத்தில் நிறைமாத குழந்தையைப் பெற்றெடுத்த ஆலியா பட்.. சந்தோஷத்தில் திளைக்கும் ரன்பீர் கபூர்

பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தனர். இந்த ஜோடியின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் கோலாகலமாக நடைபெற்றது. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்திருந்த ஆலியா பட் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த ஜூன் மாதம் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஸ்கேன் எடுக்கும் போட்டோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார். மேலும் எங்களுடைய முதல் குழந்தையை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம் என்றும் இந்த ஜோடி கூறியது. இது பலருக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது.

திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே அவர்கள் இந்த அறிவிப்பை கொடுத்தது தான் பலரின் ஆச்சரியத்திற்கும் காரணமாக இருந்தது. மேலும் ஆலியா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் சம்பந்தப்பட்ட இந்த ஜோடி அதற்கு முறையான விளக்கம் எதுவும் தரவில்லை. அதன் பிறகு ஆலியா தொடர்ந்து பட ப்ரொமோஷன்கள், போட்டோஷூட் என்று பிசியாக இருந்தார்.

அது மட்டுமல்லாமல் இயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அவர் அதற்காக யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளையும் கவனமாக செய்து வந்தார். மேலும் அவருடைய குடும்பத்தினரும் அவருக்கு பக்க பலமாக இருந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வந்தனர்.

அதை தொடர்ந்து சமீபத்தில் ஆலியாவுக்கு கோலாகலமாக வளைகாப்பும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று இந்த தம்பதிகளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயத்தை ரன்பீர் கபூர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். உண்மையில் நவம்பர் மாதம் இருபதாம் தேதி தான் ஆலியாவுக்கு குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே அவருக்கு பிரசவ வலி வந்திருக்கிறது. அதை தொடர்ந்து இன்று அதிகாலை மருத்துவமனைக்கு வந்த அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அம்மாவான ஆலியாவுக்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவருக்கு குழந்தை பிறந்திருக்கும் இந்த விஷயம் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.