எம்ஜிஆரே பயந்து நடுங்கிய சம்பவம்.. அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் நடந்த சுவாரசியம்

சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி தனி ஆதிக்கம் செலுத்திய புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு இப்போதும் மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருக்கிறது. அந்த கால சினிமாவை ஆட்சி செய்த அவருடைய புகழை போற்றும் வகையில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகி அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அப்படிப்பட்ட எம்ஜிஆர் நடிக்க பயந்த ஒரு காட்சி  என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. எம்ஜிஆர் எவ்வளவு பெரிய ஆளுமை. அந்த ஆளுமை பயந்த சம்பவம் ஒன்று இருக்கிறது. எம்ஜிஆர் நடிப்பில் 1956 ஆம் ஆண்டு வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’  என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எம்ஜிஆர் தீவிரமாக திமுகவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அந்த படத்தில் ஒரு வசனம் ‘அல்லாஹ் மீது ஆணையாக’ என்று வரும். அது வேண்டாம் என்று ‘அம்மா மீது ஆணையாக’ என்று  MGR  வாசித்து விட்டார். இதை பார்த்த அந்த படத்தின் தயாரிப்பாளர் டிஆர் சௌந்தரம் அவர்கள், ‘ராமச்சந்திரன் நீங்கள் தப்பாக வாசிக்கிறீர்கள், அது அல்லாஹ் மீது ஆணையாக’ என்று ஒரு பிடி பிடித்து விட்டாராம். உடனே மீண்டும் எம்ஜிஆர்  அந்த வசனத்தை ‘அல்லாஹ் மீது ஆணையாக’ என்று வாசித்து உள்ளார்.

பெரும்பாலும் எம்ஜிஆர் படங்களில் அரசியல்  வசனங்கள் அதிகமாக இடம்பெற்று ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கும். மேலும் அவர் பின்பற்றிய கட்சியின் கொடிகளையும் தன்னுடைய உடையில் மறைமுகமாக காட்டி இருப்பார். சொல்லப்போனால் ஆஸ்பத்திரியிலேயே படித்துக் கொண்டு முதலமைச்சர் ஆன தலைவர் என்ற பெருமையும் எம்ஜிஆருக்கு தான் உண்டு.

அந்த அளவிற்கு தன்னுடைய படங்களில் மூலம் மக்கள் மனதில் புரட்சி கருத்துக்களை விதைத்த எம்ஜிஆர் தனக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். அவர்களால்தான் எம்ஜிஆர் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. அதனால் தான் இந்த ஒரு வசனத்தை மட்டும் பேசுவதற்கு பயந்து நடுங்கி இருக்கிறார்.

ஏனென்றால் இந்த வசனத்தால் தன்னுடைய ரசிகர்கள் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காமல் போய்விடும் என்பதுதான் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தன்னுடைய  தன்னுடைய கதாபாத்திரத்திற்கு இந்த டயலாக் அவசியம் என்பதால் வேறு வழி இல்லை, பேசினால் ஆக வேண்டும் என்று அந்த  வசனத்தை பேசி முடித்தார்.