எல்லாமே விஜய் கொடுத்த தைரியம்.. படத்தின் பிரமோஷனுக்காக இவ்வளவு மட்டமாவா செய்வீங்க!

நடிகர் விஜய்யின் நடிப்பில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வாரிசு படம் திரையங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனர் தில் ராஜு தயாரித்துள்ளார். இதனிடையே வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு படமும் பொங்கலன்று ரிலீசாக உள்ள நிலையில், வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சற்று பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

துணிவு படத்தை போனி கபூர் தயாரித்த நிலையில், இப்படத்தின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும் 70 சதவிகித திரையரங்குகள் துணிவு படத்திற்கு புக் ஆகியுள்ள நிலையில், வாரிசு படக்குழு தலையில் துண்டுபோட்டு கொண்டு எப்படி வசூலை எடுப்பது என்று தெரியாமல் உள்ளது.

இதனிடையே அண்மையில் வாரிசு படத்தின் டிக்கெட் விலையை 500 ரிலிருந்து 1000 ருபாய் வரை விற்பனை செய்து படத்தின் வசூலை எடுக்கலாம் என வாரிசு படக்குழு திட்டம் தீட்டியது. இந்த திட்டத்தை விஜய் தான் பிளான் போட்டு கூறினார் என செய்திகளும் வெளியானது. மேலும் நடிகர் அஜித் என்றுமே இரண்டாம் இடம், விஜய் தான் நம்பர் ஒன் என வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூறியது இணையத்தில் சர்ச்சையை எழுப்பியது.

இவர் பேசியதற்கு பின்னலாம் விஜய் தான் உள்ளார் என அண்மையில் செய்திகள் பரவி உள்ளது. ஒரு படத்தை ப்ரோமோஷன் செய்ய விளம்பரங்களை விட பல சர்ச்சைகளில் சிக்கினால் போதும் என்பதை விஜய் நன்கு அறிந்து, வாரிசு படக்குழு முதல் தயாரிப்பாளர் வரை பிளான் போட்டு சர்ச்சையாக பேசுமாறு சொல்லி கொடுத்து வருகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் உதயநிதி ஸ்டாலினினை சந்தித்து 600 திரையரங்குகளை வாரிசு படத்திற்காக தில் ராஜு கேட்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்ற போதிலும் இதுவும் விஜய்யின் திட்டம் தான் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு விஷயம் துணிவு படத்திற்கு எதிராக விஜய் நடத்தியும் அஜித்தின் பக்கம் எந்த ஒரு சர்ச்சையும் ஏற்படவில்லை.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் தல’யா, தளபதியா என ரசிகர்களிடையே போட்டிகளும்,சண்டைகளும் மூண்டு போய் உள்ள நிலையில், இது இப்படியே போனால் கட்டாயம் பெரிய சண்டைகள் உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை. எது எப்படியோ படத்தில் கதை இருந்து ஹிட்டானால் கண்டிப்பாக படம் வசூல் ரீதியாக வெற்றிபெறும். இதை விஜய் நம்பினால் தேவையில்லாத பிளான் போட வேண்டிய அவசியம் இருக்காது என்பதே நிதர்சனம்