Allu Arjun : நடிகர் அல்லு அர்ஜுன் அவர்கள் ஒரு பிரபல நடிகர். இவர் நடிப்பில் தற்போது வெளிவந்த படங்கள் அனைத்துமே திரையுலகத்திற்கு நல்ல வசூலை பெற்றுத்தந்துள்ளன. இவரை வைத்து படம் செய்வதற்காகவே நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
அந்த வகையில் இயக்குனர் அட்லி அவர்கள் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் செய்ய போகிறார் என்று தகவல் வெளிவந்து அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அட்லீ இயக்கியது சில படங்களை என்றாலும் நிறைய வெற்றி படங்கள் கொடுத்துள்ளார்.
இயக்குனர் அட்லி இயக்கிய மெர்சல் ஜவான் மற்றும் சில படங்கள் இவருக்கு திரையுலகத்தில் நிலைத்து நிற்க வலி ஏற்படுத்திக் கொடுத்தது. இயக்குனர் அட்லி இயக்கமும் நன்றாக இருக்கும், அதேபோல் நடிகர் அல்லு அர்ஜுனும் பேர் போன ஒரு நடிகர். ஆகவே இவர்களது கூட்டணி நல்ல கூட்டணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜுனுக்கு இத்தனை வேடமா..
AA22 என்ற படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி இணைந்து பணியாற்ற போகிறார்கள். இது ஒரு பான் இந்திய படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது வெளிவந்திருக்க கூடிய தகவல் இன்னும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்றே கூறலாம்.
இந்த படத்தில் அல்லு அர்ஜுன் அவர்களுக்கு நான்கு வேடமாம், அதாவது தாத்தா, அப்பா மற்றும் இரண்டு மகன்கள் இந்த மாதிரியான கதைகளை முன்வைத்து இந்த படம் தயாராகிறது. இந்த நான்கு வேடங்களிலும் அல்லு அர்ஜுன் அவர்கள் நடிக்கிறார்கள் என்பதை தற்போது வெளிவந்துள்ள தகவல்.
அல்லு அர்ஜுன் ஒரு வருடத்தில் நடித்தாலே படம் பெரிய வரவேற்பை பெறும், தற்போது இந்த படத்தில் நாலு வேடம் என்பதால் திரையுலகத்திற்கு மிகப்பெரிய விருந்து காத்துக் கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம். தரமான பல சம்பவத்தை செய்ய காத்துக் கொண்டிருக்கிறார் அட்லி என்பது தெளிவாக தெரிகிறது.