அந்தரங்க போட்டோவை காட்டி மிரட்டல்.. 3வது காதலர் பிடியில் சிக்கிய அமலாபால்

தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த அமலாபால் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் நடந்த வேகத்திலேயே கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அமலா பாலுக்கு பெரிய அளவில் வெற்றி திரைப்படங்கள் எதுவும் அமையவில்லை. அதனால் சோசியல் மீடியாக்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவது என்று சில சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய ஆண் நண்பர் பவிந்தர் சிங் மீது காவல்துறையில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் அமலா பாலுக்கு பாலான தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

அமலா பாலுக்கு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சொந்தமான ஒரு வீடு இருக்கிறது. அங்கு தான் அவரும், அவருடைய காதலரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே சில பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் இருவரும் தனிமையில் எடுக்கப்பட்ட சில அந்தரங்க போட்டோக்களை வைத்து பவிந்தர் சிங் அமலா பாலை மிரட்டியதாகவும், அதுதான் தற்போது இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது. விவாகரத்திற்கு பிறகு அமலாபால், பவிந்தர் சிங்கை காதலித்து வந்தார், அது மட்டுமில்லாமல் காசு கேட்டு தொல்லை கொடுத்தாராம்.

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. அதற்கு ஏற்றார் போல் கடந்த 2020 ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அமலாபால் அதை திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில் தான் இப்படி ஒரு புகாரை அவர் தன்னுடைய காதலர் மீது அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். சர்ச்சைகளின் நாயகியாக இருக்கும் அமலாபால் தற்போது இந்த புகாரின் மூலம் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் இவர் அமலா பாலுக்கு 3வது காதலர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திருமண முறிவுக்கு பின் வேறு ஒருவருடன் காதலில் இருந்தார், அந்த காதல் முறிந்து போன நிலையில் தற்போது இந்த காதலும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.