அஜித்துக்கு வில்லனாக நடித்தும் பெயர் கூட தெரியப்படாத நடிகர்.. பதுங்கி இருக்கும் அயலி பட பிரபலம்

Ayali Movie Actor: இதுவரை தமிழ் சினிமாவில் 50 படங்களுக்கு மேல் நடித்தும் அந்த நடிகரின் பெயர் கூட ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆகாமல் இருக்கிறது. அந்த நடிகர் அஜித், உதயநிதி என பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்திருந்தாலும் அவருடைய பெயர் கூட யாருக்கும் தெரியாது. அவருக்கு இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

பெரிய பெரிய ஹீரோகளுக்கு வில்லனாக நடித்த போதிலும் அவருடைய பெயரை யாருக்கும் தெரியாது. சரியான ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நாள் பதுங்கி இருந்த நடிகர் மதன் குமாருக்கு இப்போதுதான் சரியான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் வெளியான அயலி வெப் தொடரில் இவர் மிகவும் பரிச்சயமானார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமான தமிழ்ச் செல்வியின் தந்தையாக தவசி என்ற கேரக்டரில் நடிகர் மதன் குமார் நடித்தார். இதில் ஒரு தந்தையின் உணர்வுகளை அப்படியே தன்னுடைய நடிப்பின் மூலம் வெளிக்காட்டி பார்ப்போரை உருக வைத்தார்.

ஆனால் இவர் இப்பொழுதுதான் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அதற்குள் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டாராம். இவரை அருவி மதன் என்று அழைப்பதுண்டு. ஏனென்றால் அருவி படத்தில் கதாநாயகியின் தலைமை ஆசிரியராக அருண் மணி கேரக்டரில் மதன்குமார் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டினார்.

இப்போது ‘அருவி மதன்’ பெயர் போய் ‘அயலி மதன்’ என்று வந்திருக்கிறது. இது மட்டுமல்ல துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருக்கிறார். அதேபோல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திலும் மதன் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதே போலவே கர்ணன், மாமன்னன் போன்ற முற்போக்கு சிந்தனை உள்ள படங்களை சரியாக தேர்வு செய்த நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நாள் பதுங்கி இருந்த அயலி மதன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பாயத் தொடங்கி விட்டார். இனிவரும் டாப் நடிகர்களின் படங்களில் மதன் குமாரை பார்க்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவருடைய நடிப்பு சமீப காலமாகவே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.