Actor Ajith: அஜித் எப்போதுமே தன்னைத்தேடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்வது கிடையாது. ஆனால் அந்த உதவிகள் அனைத்தையும் மீடியாவுக்கு தெரியாமல் அவர் பார்த்துக்கொள்வார். அப்படி இருக்கும் போது பிரபல நடிகர் ஒருவர் அஜித் வீட்டுக்கு உதவி கேட்டு சென்றும் பிரயோஜனமில்லை என்று கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லை என வீடியோ மூலம் உதவி கேட்டிருந்தார். அதைப் பார்த்துவிட்டு சின்ன சின்ன நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவியை அவருக்கு செய்தனர்.
விஜய் டிவி பாலா கூட தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து உதவி இருந்தார். அது கூட வீடியோவாக வெளியாகி பலரின் பாராட்டுகளையும் பெற்றது. இந்த சூழலில் பாவா லட்சுமணன் சமீபத்திய பேட்டியில் அஜித் வீட்டிற்கு உதவி கேட்டு சென்றதைப் பற்றி வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
அதாவது தனக்கு நிச்சயம் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் அங்கு சென்று இருக்கிறார். ஆனால் அவரை உள்ளே விட மறுத்து இருக்கின்றனர். அஜித்தின் மேனேஜரை கூட சந்திப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அதை தொடர்ந்து அஜித் வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவில் கூட தன் முகத்தை காட்டியிருக்கிறார்.
அப்படியாவது தன்னை உள்ளே கூப்பிட மாட்டார்களா என்ற நப்பாசை தான். ஆனாலும் அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது. அதைப்பற்றி கூறியுள்ள பாவா லட்சுமணன் அஜித்துக்கு மட்டும் இது தெரிந்திருந்தால் நிச்சயம் எனக்கு உதவி இருப்பார்.
என்னுடைய மருத்துவ செலவு மட்டுமல்லாமல் மாதாமாதம் ஏதோ ஒரு வருமானம் கிடைக்கும் படி செய்திருப்பார். ஆனால் என்னுடைய கஷ்ட காலம் கடைசி வரை அவருக்கு என்னை பற்றி தெரியவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார். இது தற்போது மீடியாவில் வைரலாவதை தொடர்ந்து அஜித் கவனத்திற்கு இந்த விவகாரம் செல்லுமா என்ற எதிர்பார்ப்பும் இப்போது ஏற்பட்டுள்ளது.