மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்த விஜய் சேதுபதி இன்று சினிமாவில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பெற்றிருக்கிறார். தமிழில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் இவர் தற்போது ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தன் திறமையை நிரூபித்து வருகிறார். அந்த வகையில் இவருக்கு தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது.
அதிலும் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் இவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவருக்கு போட்டியாக ஒரு நடிகரும் கை நிறைய திரைப்படங்களை வைத்துக்கொண்டு நடித்து வருகிறார். சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகராக மாறி இருக்கும் விஜய் ஆண்டனி நான், சலீம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் கணிசமான அளவு வசூலையும், ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தையும் பெற்று வந்தது.
ஆனால் சமீப காலமாக அவருக்கு சொல்லிக் கொள்ளும் படியாக படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. அது மட்டுமல்லாமல் அவர் ஏற்கனவே நடித்து முடித்துள்ள தமிழரசன், காக்கி, அக்னி சிறகுகள் போன்ற திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. என்ன காரணத்தினாலேயோ அவர் இன்னும் அந்த படங்களை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார்.
ஆனாலும் அவருக்கு இப்போது கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது. பொதுவாக ஒரு நடிகருக்கு திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலோ அல்லது நடித்த படங்கள் கிடப்பில் கிடந்தாலோ அதற்கு அடுத்து வேறு திரைப்படங்கள் எதுவும் புக் ஆகாது. ஆனால் விஜய் ஆண்டனி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவது பலருக்கும் ஆச்சரியம்தான்.
அந்த வகையில் அவர் இப்போது பிச்சைக்காரன் 2, ரத்தம், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் என பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனி நிச்சயம் கவனம் பெறுவார் என்று பட குழுவினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் நடித்து கிடப்பில் இருக்கும் படங்கள் எப்போது வெளியாகும் என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.