சினிமாவில் நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் சில வருடங்கள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் சகஜமான ஒன்றாக நடைபெற்று வருகிறது.
இப்போது இந்த விஷயங்கள் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அப்போதெல்லாம் இது பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஒன்றுக்கு இரண்டு மூன்று மனைவிகள் வைத்திருந்த நடிகர்களும் உண்டு, அதே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் வைத்திருந்த நடிகைகளும் உண்டு.
அப்படிப்பட்ட நடிகரைப் பற்றி தான் பார்க்க போகிறோம். அவர் வேறு யாரும் இல்லை, நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். பெங்களூரில் தொழிலதிபரை மகனாக இருந்த சரத்குமார் அங்கேயே ஒருவரை திருமணம் செய்துகொண்டிருந்தார்.
பின்னர் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ராதிகாவின் மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது அவருடன் வாழ்ந்து வருகிறார். இத்தனைக்கும் ராதிகா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் பலருக்கும் தெரிந்திருந்தாலும் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில், நடிகையின் மீது ஏற்பட்ட மோகத்தால் கட்டிய மனைவியை வேண்டுமென்றே விவாகரத்து செய்துவிட்டார் என சரத்குமாரை குறிப்பிட்டு சொன்னது அவரது குடும்பத்தில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
சமீபகாலமாக ஏற்கனவே பலருக்கும் தெரிந்த செய்திகளை மீண்டும் மீண்டும் சொல்லி அனைத்து நடிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன். ஒரு பத்திரிக்கையாளர் இலைமறைகாயாக சொல்ல வேண்டிய விஷயங்களை இவ்வளவு ஓப்பனாக சொல்லவேண்டுமா என அவர் மீது பல நடிகர் நடிகைகள் செம காண்டில் இருக்கிறார்களாம்.
