Ajith: அஜித் இப்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். விரைவில் நடிப்பதற்கும் தயாராகி கொண்டிருக்கிறார். ஆனாலும் ரசிகர்கள் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்க என சோசியல் மீடியாவில் கதறிக் கொண்டிருக்கின்றனர்.
அதனாலேயே ஆதிக் ரவிச்சந்திரன் பட்டும் படாமலும் மீண்டும் அஜித்துடன் இணைய போவதாக கூறியிருந்தார். இது போதாதா ரசிகர்களுக்கு படம் எப்ப ஆரம்பிக்கப் போகுது? தயாரிப்பாளர் யார்? ஹீரோயின் யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் சரியான நேரத்தில் இதை அறிவிப்பதற்காக இந்த டீம் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாகவே தற்போது கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் கசிந்துள்ளது.
30 வயசு வித்தியாசம் தேவைதானா AK.?
அதன்படி இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா நடிக்கப் போவதாக தெரிய வந்துள்ளது. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் இவர் நடித்து வருகிறார்.
அதேபோல் தெலுங்கில் அவருடைய மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. எல்லாம் சரிதான். ஆனால் 54 வயது அஜித்துக்கு ஜோடியாக 24 வயது நடிகை நடிப்பதா என்ற விமர்சனம் இப்போது எழுந்துள்ளது. இது பற்றி பெரும் விவாதமே நடத்தலாம்.
ஏனென்றால் இப்போதைய மூத்த ஹீரோக்கள் இளம் நடிகைகளுடன் நடிப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இது திரையில் பார்க்கும்போது ரசிக்கும் படியாக இல்லை.
சமீபத்தில் வெளிவந்த தக் லைஃப் படத்தில் கமல், திரிஷா ரொமான்ஸ் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. இப்படி பல உதாரணங்கள் இருக்கிறது. அதனால் AK 64 படகுழு கொஞ்சம் யோசிப்பது நல்லது.
மேலும் இப்படத்தில் லப்பர் பந்து புகழ் சுவாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். விரைவில் ராசியான ஒரு நாள் பார்த்து இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.