சோறு சாப்பிட்டால் படம் வெற்றி அடையுமா.? கோபப்பட்ட சூரி

Soori : பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கும் படம் தான் மாமன். இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என ரசிகர்கள் மதுரையில் மண் சோறு சாப்பிட்டார்கள்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதுகுறித்து சூரி தனது ஆதங்கத்தை பேட்டி அளித்துள்ளார். அதாவது மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பி என்று சொல்வதை எனக்கு வெட்கமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இது ரொம்ப முட்டாள் தனமான விஷயம். ஒரு படம் நன்றாக இருந்தால், இந்த படம் கண்டிப்பாக ஓடும். அதை யாராலையுமே தடுக்க முடியாது. அதை விட்டுவிட்டு மண் சோறு சாப்பிட்டால் எப்படி படம் ஓடிவிடுமா.

கோபத்தில் சூரி கொடுத்த பேட்டி

தம்பிகளா நீங்கள் செய்த செயல் எனக்கு மிகவும் வேதனையை அளிக்கிறது. இந்த பணத்தில் நாலு பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கிக் கொடுத்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பேன்.

இதுபோன்ற செயலை செய்பவர்களை எனது ரசிகர்களாக இருக்க கூட தகுதியற்றவர்கள். தவறான ஒரு செயலை செய்து என்னை கஷ்டப்படுத்தாதீர்கள். நல்ல படங்களை பார்த்து கொண்டாடுங்கள். உங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது.

உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் பாருங்கள் என்று சூரி கோபத்துடன் பேசுகிறார். பொதுவாகவே நடிகர்கள் அவர்களுடைய வேலையை தான் பார்க்கிறார்கள். அதற்காக ரசிகர்கள் தங்களை துன்பறுத்திக் கொள்வது வேதனையான விஷயம் தான்.