நாறிப்போன வடிவேலுவின் பெயர்.. மாமன்னனை காப்பாற்ற உதயநிதி எடுத்திருக்கும் முடிவு

உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த போது கேலி, கிண்டலுக்கு உள்ளானாலும் அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான சைக்கோ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் உதயநிதி அமைச்சரான பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளார். அதன்படி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படம் தான் அவரது கடைசி படம். இதனால் இந்த படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.

மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதே அளவு வடிவேலுவுக்கும் இயக்குனர் கொடுத்திருக்கிறார். ரெட் கார்டு தடை நீங்கி வடிவேலு சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கிய நிலையில் அவர் ஹீரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் படுமோசமான தோல்வி அடைந்தது.

ஆகையால் மாமன்னன் படத்தை வடிவேலுவும் பெரிதும் நம்பி உள்ளார். இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக வடிவேலுவை பற்றி மோசமான விமர்சனங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. அவர் தன்னை சுற்றி உள்ளவர்களை வளரவும் விட மாட்டார், யாருக்கும் செலவும் செய்ய மாட்டார் என கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.

அதுமட்டும்இன்றி பல நடிகைகளின் சினிமா வாழ்க்கை வடிவேலுவால் சீரழிந்து விட்டதாகவும் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் பேசி இருந்தார். இதனால் வடிவேலுவின் பெயர் இணையத்தில் நாறி போனதால் அவர் மீது மோசமான பார்வை ரசிகர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. இதைப் போக்க வேண்டும் என்பதற்காக உதயநிதி முக்கிய முடிவு எடுத்துள்ளார்.

அதாவது கோலிவுட் சினிமாவே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு மாமன்னன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை உதயநிதி நடத்த இருக்கிறாராம். ஆனால் இதில் விழா நாயகனாக வடிவேலுவை பெருமைப்படுத்த திட்டமிட்டு இருக்கிறாராம். இதனால் வடிவேலு பற்றி உலாவும் செய்திகள் அனைத்தும் மறைந்து இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியை தான் ரசிகர்கள் பேசுவார்கள் என்ற திட்டத்தில் உதயநிதி இவ்வாறு செய்ய உள்ளார்.