மீண்டும் கோதாவில் குதிக்கும் குதிரைக் கொம்பு கேரளத்து பைங்கிளி.. தனக்குத்தானே ஆப்பு வைக்கும் தனுஷ் நாயகி

Actor Dhanush Pair: ஹீரோயின்களைப் பொருத்தவரை எந்த நடிகர்கள் உச்சத்தில் இருக்கிறார்களோ அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டால் அவர்கள் எளிதாக
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுவார்கள். அத்துடன் தொடர்ந்து அவர்களுக்கு பெரிய படங்கள் மற்றும் நல்ல ப்ராஜெக்ட் சம்பந்தமான வாய்ப்புகள் தேடி வரும்.

ஆனால் இந்த நடிகைக்கு அப்படியே தலைகீழாக நிலைமை மாறிவிட்டது என்றே சொல்லலாம். இவர் பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு மாஸ் ஹீரோயின் ஆக தற்போது தான் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆனால் அதற்குள் சின்ன படங்களில் தத்தி தத்தி தவழ்ந்து வரும் நடிகர்களுடன் நடிக்க போய்விட்டார்.

இந்த நடிகைக்கு தமிழில் மட்டுமல்லாமல், கேரளத்திலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. தமிழில் அஜித், தனுஷ் என பெரிய பெரிய பட்ஜெட் படங்கள் நடித்து வெற்றியைக் கொடுத்தவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிவாகை சூடியது.

இவருடைய கால் சீட் கிடைப்பதே மிகப்பெரிய குதிரைக் கொம்பாக இருந்தது. இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது “மிஸ்டர் எக்ஸ்” என்ற படத்தில் கமிட்டாகி நடிக்கிறார். இந்தப் படத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சு வாரியர் மூவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

இவர்கள் படம் தற்போது எந்த நிலைமையில் சினிமாவில் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார் என்று பலரும் இவரைப் பற்றி விவாதித்து வருகிறார்கள். ஒருவேளை வெற்றி பெறாமல் தவித்து வரும் நடிகர்களுக்கு கை கொடுத்து உதவும் வகையில் கமிட்டாய் இருக்கிறாரா என்று தெரியவில்லை.

எது எப்படியோ இதன் மூலம் இவருக்கு இருந்த நல்ல மார்க்கெட்டை இவரே குறைத்துவிட்டார். இந்த படத்திற்கு பிறகு வெற்றி கிடைத்தால் ஓகே, இல்லை என்றால் அடுத்து இவருடைய வாய்ப்பு எந்த மாதிரி அமையும் என்பது கேள்விக்குறி தான். இவர் எடுத்த இந்த முடிவு எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது என்று பார்க்கலாம்.