சூட்டோடு சூடாக லோகேஷ் வெளியிட்ட அப்டேட்.. டைட்டிலுடன் வெளியான மிரட்டல் போஸ்டர்

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் தற்போது புது அவதாரம் எடுத்திருக்கிறார். சமீபத்தில் இவர் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு கம்பெனியை ஆரம்பித்தார். அதன் மூலம் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் அசிஸ்டன்ட்டுகளின் திறமையை வெளிக்கொண்டு வரப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இது வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற நிலையில் தற்போது அவருடைய தயாரிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அப்பாஸ் ஏ ரஹமத் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகும் ஃபைட் கிளப் (Fight Club) என்ற படத்தை தான் அவர் தயாரிக்க இருக்கிறார்.

இதுவும் வழக்கம் போல சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாத கதை என்பது போஸ்டரை பார்க்கும்போதே தெரிகிறது. அந்த வகையில் உறியடி படத்தை இயக்கியவரும் நடிகருமான விஜயகுமார் இதில் கதையின் நாயகனாக தோன்றுகிறார். இவர் லோகேஷின் நெருங்கிய நண்பரும் கூட.

இந்த பட போஸ்டரை வெளியிட்டுள்ள லோகேஷ் புதிய பயணம் என பெருமையுடன் தெரிவித்துள்ளார். அவருக்கு தற்போது திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். குறுகிய காலத்திலேயே இயக்குனராக ஜெயித்துக் காட்டிய லோகேஷ் தயாரிப்பாளராகவும் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார்.

இதிலும் அவர் சாதித்து காட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அதன்படி அவர் தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்த சூட்டோடு சூடாக வேலையிலும் இறங்கி விட்டார். தற்போது சூப்பர் ஸ்டாரை இயக்குவதற்கு தயாராகி வரும் இவர் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு சப்போர்ட்டாக இருப்பது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

லோகேஷ் வெளியிட்ட அப்டேட்

lokesh-fight-club
lokesh-fight-club