Ajith: சில விஷயங்கள் நம்ம அறியாமல் நமக்கு நல்லதாகவே அமைந்துவிடும். அதுபோல்தான் அஜித்திற்கு சினிமா கேரியரில் மிகப்பெரிய ஒரு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் எந்தவித சப்போர்டும் இல்லாமல் நுழைந்து பல அவமானங்களையும் தோல்விகளையும் சந்தித்தவர் தான் நடிகர் அஜித். ஆனால் அதற்கெல்லாம் துவண்டு போகாமல் எல்லாத்தையும் ஓவர் டேக் பண்ணி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்.
அப்படிப்பட்ட இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பொழுது இவரிடம் இருந்த ஒரு பிளஸ் பாயிண்ட் பார்க்க அழகாக புன்னகையுடன் இருக்கிறார் என்ற விஷயமே பலரையும் கவர்ந்தது. இதனால் தான் ஒரு சில பட வாய்ப்புகளும் ஆரம்பத்தில் கிடைத்தது. அதன் பிறகு அஜித்தின் கேரியரே புரட்டி போட்ட படமாக ஆசை படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு ஆசை படம் வெளிவந்தது. முதலில் இயக்குனர் இப்படத்தின் கதையை சிவக்குமாரின் மகன் சூர்யாவை நினைவில் வைத்து தான் எழுதியிருக்கிறார். இதைப்பற்றி சிவகுமார் இடம் சொல்லிய பொழுது, சூர்யாவிற்கு தற்போது சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டார்.
அதன் பிறகு அஜித் ஆரம்பத்தில் நடித்த ஒரு விளம்பரத்தில் பார்த்ததை ஒட்டி இயக்குனர் இவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு பண்ணி அஜித்திற்கு வாய்ப்பு கொடுத்து தான் ஜீவானந்தம் கேரக்டர். அதே மாதிரி இப்படம் வெளிவந்த பிறகு இந்த கதாபாத்திரத்திற்கு தகுந்த ரொமான்டிக் ஹீரோவாகவும், காதலை தத்ரூபமாக காட்டி நடிக்கக்கூடிய நடிகராகவும் அனைவரும் பார்க்க ஆரம்பித்தார்கள்.
அந்த வகையில் இப்படம் செம ஹிட் ஆகி அஜித்திற்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த ஒரு வாய்ப்பை நழுவு விட்டு விட்டோம் என்று தற்பொழுது வரை சூர்யா இதை நினைத்து புலம்பித் தவித்து வருகிறார். பொதுவாக ஒரு வாய்ப்பு நம்மை தேடி வரும் பொழுது அதை நிராகரித்துவிட்டு, மற்றவர்கள் அதை பயன்படுத்தி முன்னுக்கு வந்து விட்டால் அந்த கடுப்பு இருக்க தான் செய்யும். ஆனாலும் சூர்யாவும் யாருக்கும் குறைஞ்சவங்க இல்லை என்பதற்கு ஏற்ப அவருக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.