ஒரு படத்திற்கு 15 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார் அனிருத். அதற்காக நீண்ட நாட்கள் வேலை செய்தும் வருகிறார். இப்பொழுது கிங்டம், ஜனநாயகன் போன்ற படங்கள் என கைவசம் ஆறு படங்களுக்கு மேல் கமிட்டாகி இருக்கிறார். இன்னும் ஒரு வருடத்திற்கு அவரது கால்ஷீட் பிஸியாக இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க இதைவிட அதிகமாக சைடு கேப்பில் சம்பாதித்து வருகிறார் அனிருத். சமீப காலமாக பெரிய இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளில் கச்சேரி செய்து நன்றாக சம்பாதித்து வருகிறார்கள். அப்படி சமீபத்தில் இளையராஜா வெவ்வேறு இடங்களில் மியூசிக் கான்சர்ட் செய்து வருகிறார்.
அவரைப் போல அனிருத்தும் இப்பொழுது பல இடங்களுக்கு சென்று மியூசிக் ஆல்பங்களை இயக்கி வருகிறார். எல்லா இடத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், சினிமாவை பார்ட் டைம் ஆக மாற்றிவிட்டார். இவரது இசை நிகழ்ச்சிகளுக்கு குக்கும் என்று பெயர் வைத்துள்ளார். எல்லா இடங்களிலும் இவரது நிகழ்ச்சி ஹிட் அடித்து வருகிறது.
மே 31ஆம் தேதி பெங்களூரில் இவர் மீண்டும் ஒரு மியூசிக் கான்சர்ட்டை நடத்த இருக்கிறார். சமீபத்தில் பீக்கில் இருக்கும் தயாரிப்பு நிறுவனம் இதை நடத்துகிறது. இந்த ஆல்பத்திற்கான டிக்கெட்டுகள் ஜோராக விற்பனையாகி வருகிறது. அனிருத்தின் நிகழ்ச்சியை நேரில் காண பெங்களூர் மக்கள் பெரிதும் ஆவல் காட்டுகின்றனர்.
சுமார் ஒரு மணி நேரத்தில் 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. ஒரு டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை நான்காயிரம் ரூபாய். இப்படி ஒரு நாளில் கான்சர்ட் மூலம் பல லட்ச ரூபாய் அள்ளி விடுகிறார் அனிருத். இதை விஜய்யின் ஜனநாயகன் படத்தை தயாரிக்கும் கே வி என் நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.