தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் அனிருத் தற்போது வெளியாகும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சில திரைப்படங்களில் தனது குரலின் மூலமாக பாடல்களையும் பாடி அதையும் ஹிட் கொடுத்து வருகிறார். இதனிடையே நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளாராக அறிமுகமான அனிருத், அந்த படத்தில் இயக்குனராக பணிபுரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார்.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்று அனிருத் தென்னிந்தியாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது முன்னாள் கணவர் நடிகர் தனுஷை விவாகரத்து செய்து கொண்ட பின், தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்க உள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
இதனிடையே முதன்முதலில் அனிருத் தான் இத்திரைப்படத்தில் இசையமைப்பதாக கமிட்டாகி இருந்தார். ஆனால் தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு அனிருத் லால் சலாம் திரைப்படத்தில் இசையமைக்க தான் வாங்கும் மூன்று கோடி சம்பளத்திலிருந்து 5 கோடி சம்பளமாக உயர்த்தி கேட்டுள்ளார்.
இதனால் கடுப்பான லைகா தயாரிப்பு நிறுவனம் இவர் கேட்ட சம்பளத்தை ஏ.ஆர். ரஹ்மானிடம் கொடுத்து இசையமைக்க முடிவு செய்தது. ஆனால் இந்த முடிவுக்கு பின் நடிகர் ரஜினிகாந்தும் உள்ளார் என்பது தான் உண்மை. ஏனென்றால் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.
இதனிடையே அனிரூத்தை சினிமாத்துறையில் அறிமுகப்படுத்திய தன் மகளின் திரைப்படத்திற்கு இவ்வளவு அதிகமாக சம்பளம் கேட்பது ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்தும் அத்திரைப்படத்தில் நடிக்க உள்ளதை அறிந்துக்கொண்டு அனிரூத் சம்பளத்தை அதிகமாக கேட்டது, ரஜினிகாந்த்தை அவமானப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இதன் காரணமாகத்தான் லால் ஸலாம் திரைப்படத்திலிருந்து அனிருத் வேகமாக விலக்கப்பட்டார். பொதுவாக இசையமைப்பாளர்கள் அல்லது பிரபலங்கள் பிரபலம் அடைந்து விட்டாள் தங்களது சம்பளத்தை உயர்த்தி கேட்பது சாதாரண விஷயம் தான். ஆனால் தங்களை வளர்த்துவிட்டவர்களிடமே தங்களுடைய வேலையை காட்டுவதுதான் தவறானது என்பது குறிப்பிடத்தக்கது.