அண்ணா : சண்முகத்திற்கு ஏற்பட்ட பதட்டம்.. இந்த சந்தோசமா நீடிக்குமா?

Anna : ஜீ தமிழ் தொலைக்காட்சியில், டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும் சீரியல் அண்ணா. இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த சீரியலில் இதுவும் ஒன்று. பல நாள் போராட்டத்திற்குப் பிறகு சண்முகம் அடையும் நிம்மதி அடுத்த நிகழ போவது என்ன?

சந்தோஷமான தருணம்..

அண்ணன் சமூகத்தின் ஆசைப்படி, வீரா மற்றும் ரத்னாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மெஹந்தி வைக்கும் முறையில் அண்ணியான பரணி பரபரப்புடன், ரத்னாவிற்கும் மெஹந்தி வைத்துக் கொண்டிருக்கிறாள்.

பின்பு மண்டபத்தில் அறிவழகன் எல்லாரும் முன்பும், எல்லாரும் காதலித்து திருமணம் செய்யுங்கள். இந்த காதல் எல்லாம் என்னை இப்படி மாற்றியது விழுந்து விழுந்து படித்து தான் போலீஸ் ஆனேன் என்று தனது கதையை சந்தோஷமாக சொல்கிறான் அறிவழகன்.

குடும்பமே சேர்ந்து சந்தோஷமாக இதை பார்த்துக் கொண்டிருக்கிறது. பின்பு ரத்னாவை கூப்பிட்டு உன்னை காதலிக்கிறேன் என்று கூறுகிறான் அறிவு. இதைக் கேட்டு ஒரே வெட்கத்தில் குனிகிறாள் ரத்னா. சண்முகமும் அறிவு பேசுவதை கேட்டு மணந்தார சந்தோசம் அடைகிறான்.

ரத்னா மற்றும் வீராவிற்கு சந்தோஷமாக நழுங்க வைத்து குடும்பமே ஒரே ஆனந்தத்துடன் இருக்கின்றனர். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில், எதிராளிகள் ஏதாவது சரி செய்வார்களா என்று சண்முகத்தின் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

ரத்னா மற்றும் வீராவிற்கு நல்லபடியாக திருமணம் நடக்குமா? இல்லை சண்முகம் பயப்படுவது போல் ஏதாவது எதிரி கூட்டங்கள் சரி செய்வார்களா? என்பதை நோக்கி இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.