ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பலமுறை தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் விரைவில் அண்ணாத்த படத்தை முடித்துவிடலாம் என ரஜினி சென்ற நிலையில் திடீரென படக்குழுவினர் சிலருக்கு கொரானோ தொற்று ஏற்பட்டு கைவிடப்பட்டது. மேலும் ரஜினிக்கும் ரத்தக்கொதிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறித்து விட்டது. வருகின்ற தீபாவளிக்கு நவம்பர் 4 ஆம் தேதி அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.
நீண்ட நாட்களாக அப்டேட் இல்லாமல் காத்துக்கொண்டிருந்த ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. மேலும் அரசியல் சலசலப்புகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியின் படம் திரைக்கு வருவதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.
பக்கா கமர்ஷியல் படமாக உருவாக இருக்கும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளதாகவும் ரிலீஸ் போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.
