சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியானதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
மேலும் வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாகப் போவது என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாகவும் கூறினர்.
சிறுத்தை சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்தை எடுத்தவரை போட்டுப் பார்த்ததில் சில காட்சிகள் மொத்த படத்தையும் கெடுக்கும்படி அமைந்துவிட்டதால் படக்குழுவினர் கொஞ்சம் அப்செட்டில் இருந்துள்ளனர்.
மேலும் இப்போதுதான் உடல்நிலை சரியாகி ரஜினிகாந்த் திரும்ப வந்த நிலையில் மீண்டும் சில நாட்கள் படப்பிடிப்புக்கு ஒத்துக் கொள்வாரா என யோசித்துள்ளனர். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியிடம் பேசி ஒரு வாரம் கால்ஷீட் வாங்கி உள்ளார்களாம்.
அதில் எந்தெந்த காட்சிகள் சரியில்லையோ அதற்கு தகுந்தபடி படப்பிடிப்பை மாற்றி எடுக்கும்படி உத்தரவிட்டடுள்ளார்களாம். இதற்காக அடுத்த வாரம் மேற்கு வங்காளத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இது குறித்து ரஜினியிடம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேசிய நிலையில் அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். தர்பார் படம் போல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அண்ணாத்த படத்தை வெற்றிப் படமாகக் கொடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என சொல்லி விட்டாராம் சூப்பர் ஸ்டார்.
