ரஜினியையே அண்ணாந்து பார்க்க வைத்த அண்ணாச்சி.. வியப்பில் இருக்கும் நடிகர்கள்

சென்னையில் புகழ்பெற்ற தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் அண்ணாச்சி தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பலரும் தங்கள் நிறுவனத்தின் பிரமோஷனுக்காக விளம்பரத்தில் நடித்து வருகின்றனர்.

அதேபோன்று சரவணா ஸ்டோர் அண்ணாச்சியும் இளம் நடிகைகளுடன் கலர் கலர் உடை அணிந்து கலக்கலாக விளம்பரங்களில் நடித்து வந்தார். இது பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானது. இருப்பினும் அண்ணாச்சி அதைப்பற்றி கவலைப்படாமல் புது புது விளம்பரங்களில் நடித்து வந்தார்.

அந்த சமயத்தில் அண்ணாச்சி திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதை கேள்விப்பட்ட பலருக்கும் மயக்கம் வராத குறையாக இருந்தது. தி லெஜன்ட் என்ற பெயரில் உருவாகி கொண்டிருக்கும் அந்த திரைப்படத்தில் ஊர்வசி ரௌடெலா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பலரும் கிண்டல் செய்தாலும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருக்கிறது. தற்போது அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு விஷயத்தை அண்ணாச்சி செய்திருக்கிறார்.

அதாவது இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அவர் நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த விழாவில் திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் அதில் படத்தின் இரண்டாம் பாடலான வாடிவாசல் பாடல் வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட அண்ணாச்சி ஏற்பாடு செய்து வருகிறாராம். இதுவரைக்கும் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தான் உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகும்.

ஆனால் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அவர்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிரமாண்டமாக படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். இதைப்பார்த்த மற்ற நடிகர்கள் போற போக்கை பார்த்தால் நம்ம அண்ணாச்சி சூப்பர் ஸ்டாரை ஓரங்கட்டி விடுவார் போல என்று கூறி வருகின்றனர். இதைக் கேள்விப்பட்ட ரஜினியும் ஆச்சரியத்தில் தான் இருக்கிறாராம்.